பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கு செய்முறை
தேர்வு-மதிப்பெண் வழங்குவதற்கான விதிமுறைகளை அரசு தேர்வுத்துறை இயக்குனர்
உஷாராணி, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி
உள்ளார்.
* பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ்வோர்டை பயன்படுத்தி பிளஸ்-2 இரண்டாம் ஆண்டு செய்முறை தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை அனைத்து மாணவர்களும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
* தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு பொதுப்பிரிவு தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறை தேர்வுகள் வருகிற 16-ந்தேதி முதல் 23-ந்தேதிக்குள் கண்டிப்பாக நடத்த வேண்டும்.
* செய்முறை தேர்வு புறத்தேர்வில் பங்கேற்காத பள்ளி மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை படிவத்தில் பாட வாரியாக பூர்த்தி செய்ய வேண்டும். அதை செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியலுடன் தவறாது இணைத்து அனுப்ப வேண்டும்.
* செய்முறை தேர்வு நடத்துவது தொடர்பாக கீழ்க்கண்ட பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
1. முதன்மை கண்காணிப்பாளர்.
2. புறத்தேர்வாளர்களாக வேறு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
3. அகத்தேர்வாளர்களாக அதே பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
4. உதவியாளர்கள்
5. எழுத்தர்
6. அலுவலர் உதவியாளர், துப்புரவு பணியாளர், குடிநீர் வழங்குபவர்.
செய்முறை தேர்வு நடத்துவதற்கு துறை அலுவலர்களை நியமனம் செய்ய தேவையில்லை.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குனரை அணுகி செய்முறை புறத்தேர்வு நடத்துவதற்கு தேவையான முன் பணத்தை காசோலையாக பெற்றுக் கொள்ள வேண்டும்.
செய்முறை தேர்வு முடிந்ததும் செலவு கணக்குகளை அரசு தேர்வுகள் உதவி இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும்.
செய்முறை தேர்வு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உழைப்பூதியம் முன்பணம் வழங்க சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பட்டுவாடா செய்யப்படும் உழைப்பூதிய பற்று சீட்டுகளில் ஆசிரியர்கள், பணியாளர்களிடம் நீள மையினால் மட்டுமே கையொப்பம் பெற வேண்டும்.
உயிரியல் பாட செய்முறை தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல்களில் 2 காலமாக பிரித்து உயிரி - தாவரவியல் மற்றும் உயிரி-விலங்கியல் பாடங்களின் செய்முறை தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்.
* இயற்பியல் பாட செய்முறை தேர்வுக்கு சைன்டிபிக் டிஜிட்டல் டைரியை மட்டுமே எடுத்து வர மாணவர்களுக்கு அனுமதி வழங்கலாம்.
* அந்த கால்குலேட்டரை மட்டும்தான் மாணவர்கள் வைத்திருக்கிறார்களா? என்பதை தேர்வுக்கு முன்பு பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* செய்முறை தேர்வில் மாணவர்களுக்கு வழங்கும் மதிப்பெண்களை (அக மதிப்பெண்கள் 3+2 உள்பட) இணைய தளம் வழியாக பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலில் பதிவு செய்ய வேண்டும்.
* முதன்மை கண்காணிப்பாளர், தலைமை ஆசிரியர் ஒவ்வொரு நாளும் பூர்த்தி செய்த செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியல்களை பாட வாரியாக தனித்தனி உறையில் எழுதி சீல் வைத்து சொந்த பொறுப்பில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
* புறத்தேர்வு, செய்முறை பதிவேடு திறன் மதிப்பீட்டுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களை தலைமை ஆசிரியர்கள் ஒரு பதிவேட்டில் பதிந்து தனது சொந்த பொறுப்பில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
* அனைத்து செய்முறை தேர்வுகளும் முடிந்த பிறகு பாட வாரியாக பூர்த்தி செய்த மதிப்பெண் பட்டியல் அடங்கிய உறைகளை பொதுப்பாட பிரிவு செய்முறை தேர்வு- தொழிற்கல்வி பாடப்பிரிவு செய்முறை தேர்வுகள் என பிரித்து தனித்தனியே தலைமை ஆசிரியரின் சான்றிதழுடன் இணைத்து வருகிற 24-ந்தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
* அதன் பிறகு முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் மதிப்பெண் பட்டியல்களை பள்ளிக்கூடம் வாரியாக பிரித்து அடுத்த (மே) மாதம் 6-ந்தேதி அன்று மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.