'இஸ்கான்' சார்பில் 'பக்தி மண்டலம்' எனும் பெயரிலான இலவச'ஆன்-லைன்' கோடை கால முகாம் மே 3ம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.
'இஸ்கான்' எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சென்னை பிரிவு சார்பில் 6 முதல் 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு'பக்தி மண்டலம்'எனும் தலைப்பிலான இலவச 'ஆன்-லைன்' நிகழ்ச்சி துவக்கப்படுகிறது.இதில் ஸ்லோகம், பஜன், ஓவியம், பெயின்டிங், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு ஆகியவை 20 பேருக்கு ஒரு ஆசான் என்ற அடிப்படையில் போதிக்கப்பட உள்ளன.
அதேபோல 13 முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு சப்த ரிஷிகள் ஆச்சாரியார்கள் குறித்து போதிப்பதோடு குழு கலந்துரையாடல் விவாதமும் நடக்கிறது.முதல் வகுப்பு மே 3ம் தேதி துவங்கி 14ம் தேதி வரையும் இரண்டாம் வகுப்பு மே 17ல் துவங்கி 28ம் தேதி வரையும் நடக்கிறது.இதில் பங்கேற்க விருப்பமுள்ள சிறார்கள் iskconchennai.org/summercamp வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என 'இஸ்கான்' தலைவர் சுமித்ரா கிருஷ்ண தாஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.