முதுகலை நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலால், மிக மோசமான கட்டத்தை நாடு எதிர்த்துப் போராடுவதால், அதிகமான மருத்துவ பட்டதாரிகளை கிடைக்கச் செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொரோனா தடுப்பு பணிகளில் திறம்பட கையாள மனித வளங்களை மேம்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மறு ஆய்வு செய்தார். முதுகலை நீட் தேர்வுக்கு தயார் ஆகும் மருத்துவ மாணவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மத்திய அரசு எதிர்பாக்கிறது.

முன்னுரிமை
100 நாட்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவ மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதன் அடிப்படையில் அந்த மாணவர்களுக்கு அரசு முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் அலுவலக வட்டார அறிவிப்பு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.