தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளை துவங்க உள்ளது; ௮.௮௫ லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இம்மாதம் 5ம் தேதியும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 6ம் தேதியும் துவங்கின. பிளஸ் 1 பொதுத் தேர்வு நாளை துவங்க உள்ளது. இந்தத் தேர்வில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 7,534 பள்ளிகளைச் சேர்ந்த, 4.50 லட்சம் மாணவியர், இரண்டு மூன்றாம் பாலினத்தவர் உட்பட, 8.85 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். தேர்வு எழுதுவோரில், 5,873 தனி தேர்வர்கள், 5,299 மாற்றுத் திறனாளிகள், 99 சிறை கைதிகளும் இடம் பெற்றுள்ளனர். பிளஸ் ௧ பொதுத்தேர்வு மாணவர்களுக்காக, புதுச்சேரியில் 38 உட்பட 3,119 தேர்வு மையங்களும், தனி தேர்வர்களுக்கு 115 மையங்களும்; கைதிகளுக்காக ஒன்பது சிறைகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்வறைக்குள், மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் எடுத்து செல்லவும், காலணிகள், ஷூ, சாக்ஸ், பெல்ட் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க, 94983 83081, 94983 83075 என்ற எண்களில், காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை, மாணவர்கள், பெற்றோர் தொடர்பு கொள்ளலாம் என்று அரசு தேர்வு துறை அறிவித்து உள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும் 31ம் தேதி முடிகிறது. தேர்வு முடிவுகள் ஜூலை 7ல் வெளியிடப்பட உள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.