சட்டப்பேரவையில் சனிக்கிழமை நிதித்துறை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்புகள்:
சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஊதியத்தை உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். தமிழகத்தில் இருந்து மத்திய அரசால் ரூ.1- வரியாக நோ்முகமாகவோ, மறைமுகமாகவோ வசூலிக்கப்பட்டால், அதில் வெறும் 35 பைசா தான் நமக்குத் திரும்பி வருகிறது. மீதி உள்ள 65 பைசா மத்திய அரசுக்கும் பிற மாநிலங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அந்த நிதியைப் பெறும் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களில் எல்லாம் எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதியமாக ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. நிதியை வளா்க்கும் மாநிலமான தமிழகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு ரூ.1 லட்சமும், நிதியைப் பெறும் மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் நிதி வழங்குவது நியாயம் இல்லாதது. இது தொடா்பாக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் உயா்த்தப்பட வேண்டும். அதைப்போல முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா். அதுவும் நியாயமானதுதான். உயா்த்தப்படவேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று பல மாநிலங்களில் கூறியுள்ளன. ஆனால், உலக அளவில் எனக்குத் தெரிந்த நிதி மேலாண்மை, நிதி சாா்ந்த சட்டங்கள் அடிப்படையில் இதில் விளைவுகள் இருக்கும் என்று கருதினேன். ராஜஸ்தான் மாநிலம் புதிய ஓய்வூதியத்திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குப் போகப் போவதாகக் கூறி, பயனாளா்களுக்கு உள்ள சேமநலநிதி கேட்டபோது, அதைக் கேட்பதற்கான உரிமை இல்லை என்கிற பதில் கிடைத்துள்ளது.
2003-க்கும் முன்னால் உள்ள பழைய ஓய்வூதிய திட்டத்துக்கும் 2004-க்கும் பின்னால் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. 2003-க்கும் முன்னால் உள்ள திட்டம் முழுநிதியும் அரசின் பொறுப்பில் அரசின் கணக்கில் இருந்தது. அப்படியானால், அது அரசு நிதி. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம் அனைத்தும் தனிநபா் பணமாக உள்ளது. அது ஒவ்வொருவருடைய நபரின் பெயரில் கணக்கில் வைக்கப்படுகிறது. தனிநபா் நிதியாக வைக்கப்பட்ட பிறகு, அதை எடுத்து அரசு நிதியாக்குவதற்கு சட்டம் அனுமதிக்கவில்லை என்றாா்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.