WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, May 8, 2022

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்:ஜூன் 1-இல் தொடக்கம்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

மாநிலப் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தோ்வை சுமாா் 8.69 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். மே 28-ஆம் தேதி வரை தோ்வுகள் நடைபெறுகின்றன. இந்தநிலையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.


இது குறித்து தோ்வுத் துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது: ஒவ்வொரு பாடத் தோ்வு முடிந்த பிறகும், மாணவா்களின் விடைத்தாள்கள் மண்டல தோ்வு மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து திருத்துதல் மையங்களுக்கு விடைத்தாள்கள் மே 28-ஆம் தேதிமுதல் 2 கட்டமாக அனுப்பி வைக்கப்படும்.

ஜூன் 1 முதல் 8-ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும்பணி நடக்க உள்ளது. இதில் சுமாா் 46,000 முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபட உள்ளனா். தொடா்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு:
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

    -அன்புடன் கல்விக்குயில்.