WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 11, 2022

கல்வி உதவித் தொகை வழங்காத தலைமை ஆசிரியை; விழுப்புரத்தில் கலெக்டர் அதிரடி.

 

விழுப்புரம் அருகே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்காத தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தென்பேர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு, கடந்த 4 ஆண்டுகளாக கல்வி உதவித் தொகை வழங்கப் படவில்லை. பலமுறை கேட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் 40 பேர் நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையை வழங்கக் கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு கலெக்டரிடம் முறையிட்டனர்.அதிரடி நடவடிக்கைகலெக்டர் மோகன் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா அந்த பள்ளியில் ஆய்வு செய்தார். அதில், மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காதது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, கலெக்டர் உத்தரவின் பேரில், தென்பேர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீரங்கநாச்சியார், 55; என்பவரை நேற்று மாலை சஸ்பெண்ட் செய்து சி.இ.ஓ., உத்தரவிட்டார்.மேலும், இது தொடர்பாக, பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் சுந்தரமவுலியிடம் துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.