Thursday, May 12, 2022
தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் யுஜிசி அதிகாரியிடம் நேரடி கோரிக்கை
தமிழகம் முழுவதும் 149 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 5500 நபர்கள் கௌரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வருகின்றனர். தமிழக கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலக அதிகாரிகள் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அதிகாரிகளுடன் கடந்த 15 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கக்கோரி கோரியும் பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழக உயர்கல்வித் துறை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். தமிழக உயர்கல்வித் துறை அதிகாரிகள் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கவேண்டிய உரிமைகளையும் சலுகைகளையும் வழங்காமல் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு விதிமுறைகளை மீறி இலட்ச கணக்கில் ஊதியம் வழங்குவதிலும் அவர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்குவதிலும் மட்டும் அக்கறை காட்டுகின்றனர். கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தர சம்பந்தமான முன்னெடுப்பு பணிகளை தமிழக உயர்கல்வித் துறை ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் காலதாமதம் அடைவதால் வயதில் மூத்த கௌரவ விரிவுரையாளர்கள் கவலை அளிக்கின்றனர். ஒரு சில மூத்த கௌரவ விரிவுரையாளர்கள் கௌரவ விரிவுரையாளர்களாகவே பணி ஓய்வு அடைந்து விடுவோமோ என அச்சப்படுகின்றனர். மேலும் கௌரவ விரிவுரையாளர்களிடம் கல்லூரிப் படிப்பைப் படித்த மாணவர்கள் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியமர்த்தப்பட்டால் அவர்களுக்கு கிடைக்கும் உரிமைகளும் சலுகைகளும் கூட சம்பந்தப்பட்ட கல்லூரிகளிலும் பல்கலைக் கழகத்திலும் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கிடைப்பதில்லை. குறிப்பாக தமிழக உயர் கல்வித் துறையைப் பொருத்தவரை அரசுக்கு நிதி குறைவு ஏற்படும் எந்தவித கோரிக்கையும் விரைவில் பரிசீலிப்பது இல்லை. அதுமட்டுமல்லாது நிதி இழப்பு ஏற்படாத ஒரு சில கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் வேண்டுமென்றே மெத்தனப் போக்கில் அரசிடம் முறையாக கொண்டு சேர்ப்பது இல்லை. அரசின் உளவுத்துறைகள் கொடுக்கும் அறிக்கைகளையும் கண்டு கொள்வதில்லை. உதாரணமாக நெறியாளர் பணி (Guideship) , மகப்பேறு விடுமுறை, விடுப்பு எடுப்பதில் உள்ள குளறுபடிகள், நீண்ட தூரம் பயணிக்க கூடிய கவுரவ விரிவுரையாளர்களுக்கு இடையே பணி மாறுதல் கலந்தாய்வு, பணி அனுபவ சான்று அளிப்பதில் உள்ள குளறுபடிகள் போன்ற எந்தவித குறைபாடுகளையும் சரி செய்வது இல்லை. இது சம்பந்தமாக பலமுறை பல்வேறு கௌரவ விரிவுரையாளர் அமைப்புகள் அரசிடம் கோரிக்கைகளை மனுக்கள் மூலமாகவும் போராட்டத்தின் வாயிலாகவும் தமிழக உயர் கல்வித் துறை அதிகாரிகளிடம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தெரிவித்து வருகின்றனர். தமிழகம் போன்ற மாநிலங்களில் நிரந்தர பேராசிரியர்களைப் போன்று ஊதியம் தருவதில் பாரபட்சம் காட்டுவது மட்டுமல்லாமல் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மேசை மற்றும் நாற்காலி வசதியினை கூட செய்து தருவதில்லை. பெரும்பாலான இந்திய மாநிலங்களின் பணியாற்றி வரும் பல்கலைக்கழகம் மற்றும் அரசு கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களுக்கு இதே நிலைதான் தொடர்கிறது. மேலும் ஊதிய உயர்வு கேட்டு நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டாலும் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனர் தரப்பு பதில் மனுவை கூட தாக்கல் செய்யாமல் 15 மாதங்களாக அலட்சியம் காட்டுகின்றன. இன்னும் ஒரு சில கௌரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வழக்கு தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக தீர்ப்பினை அமல்படுத்துவதில் அலட்சியம் காட்டுகின்றன. ஆனால் இங்கு ஆளக்கூடிய மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு அரசு கல்லூரிகளை ஆரம்பிப்பது மாணவர்கள் தரப்பில் பொருத்தவரை நல்லது என்றாலும், கௌரவ விரிவுரையாளர்களை பொறுத்தவரை மிக மிகக் கேவலமாக தமிழக அரசு நடத்துகிறது. இந்தியாவிலேயே திரிபுரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக கவுரவ விரிவுரையாளர்கள் கேவலமாக நடத்த கூடிய ஒரே மாநிலம் தமிழகம் தான். அதுமட்டுமல்லாது இந்தியாவிலேயே உயர்கல்வித்துறை படிக்கும் மாணவர்களின் சதவீதம் 52 என உள்ளது. மேலும் 10 வருடங்களில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போல் நிரந்தர பேராசிரியர்களையோ கௌரவ விரிவுரையாளர்களையோ நிரப்புவது இல்லை. மேலும் பல ஆண்டுகளாக கௌரவ விரிவுரையாளர்கள் போராடினாலும், அவர்களை அடிமைப்படுத்தும் முறை கலைய படவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளில் ஒன்றான முதல்வாரத்தில் ஊதியம் பெறுவதை தவிர வேறு எந்த பிரச்சனையும் சரி செய்யப்படவில்லை. தமிழக உயர்கல்வித் துறை அதிகாரிகளிடம் இருந்து கௌரவ விரிவுரையாளர்கள் பிரச்சனைகள் குறித்து எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தினால் அகில இந்திய அளவில் 23 மாநிலங்களில் இணைந்து தேசிய அளவிலான கௌரவ விரிவுரையாளர்கள் கூட்ட அமைப்பினை தோற்றுவித்துள்ளனர். அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மற்றும் அமைப்பின் மாநில பிரதிநிதிகள் தமது மாநில பிரச்சனைகளை நேரடியாக யுஜிசி , மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகளிடம் 9.5.2022 தேதி கோரிக்கை மனுக்கள் மூலம் நேரடியாக தெரிவித்துள்ளனர். வருகின்ற கல்வியாண்டில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு இந்திய மாநிலங்களில் இழைக்கப்படும் சமூக அநீதிகள், ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட கௌரவ விரிவுரையாளர்களின் நீண்டநாள் பிரச்சினைகள் தொடரும் பட்சத்தில் தேசிய அளவிலான கௌரவ விரிவுரையாளர்கள் பாதிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்களுக்காகவும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உயர் கல்வித்துறை அதிகாரிகளின் செயல்பாட்டினை கண்டித்து யுஜிசி வளாகம் மனித வள மேம்பாட்டு துறை உலகம் அலுவலகம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணைய அலுவலக முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என தேசிய அளவிலான பல்கலைக்கழகம மற்றும் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர் சங்கத்தின் மாநில தலைவருமான முனைவர் தங்கராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.