WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 14, 2022

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – 60,000 காலி இடங்கள் இருப்பதாக அறிவிப்பு!

 தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்ட நிலையில் அதில் 14 பொறியியல் கல்லூரிகளில் நான்கு சுற்றுகளை கடந்தும் ஒரு இடம் கூட நிரப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 2022-23 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. மேலும் நான்கு சுற்றுகளாக நடந்து முடிந்த கலந்தாய்வில் தமிழகத்தில் உள்ள 14 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரப்பபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்விற்கு 1.5 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் இந்த ஆண்டு 93,571 இடங்கள் ஒதுக்கப்பட்டு 60,707 இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நான்காவது சுற்று நடைபெறும் போது 30,938 தற்காலிக ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. எனவே மொத்தமாக 93,571 இடங்கள் நான்கு சுற்றுகளில் ஒதுக்கப்பட்டன. இந்த இடங்கள் கடந்த ஆண்டை விட 5,000 இடங்கள் அதிகமாகும். கடந்த ஆண்டு நடைபெற்ற கலந்தாய்வில் வெறும் 88,596 இடங்கள் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு கணினி அறிவியல் பிரிவில் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற கலந்தாய்வில் 446 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டதாகவும், அவற்றில் 12 கல்லூரிகள் மட்டுமே 100% இடங்களையும், 66 கல்லூரிகள் 90% இடங்களுக்கு மேல் இடங்களை நிரப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 217 கல்லூரிகளுடன் ஒப்பிடும்போது 237 கல்லூரிகள் 50% இடங்களுக்கு மேல் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு 36 கல்லூரிகள் பத்துக்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மேலும் நீட் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியான நிலையில் அதன் காரணமாக, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரிகள் நவம்பர் 14ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.