WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 14, 2022

எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

தொடர் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள, செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை(நவ.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு உள்பட குன்றத்தூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் திங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் நன்மங்கலம், வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், அனகாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளி, நன்மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி, மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை(நவ.14) மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.