தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், இயற்பியல், பொருளியல், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. கடந்த 3 வாரமாக நடத்தப்பட்டு வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்.3) நிறைவு பெறுகிறது.
இறுதி நாளில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் மட்டும் நடைபெறவுள்ளது. பொதுத்தேர்வு முடிவதை அடுத்து பெரும்பாலான பள்ளிகளில் பிரிவு உபசார விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவதை அடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்.10 முதல் 21-ம் தேதி நடைபெற உள்ளன. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வரை வெளியிடப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.