WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 25, 2023

அரசு கலைக்கல்லூரிகளில் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று வருகின்ற மாணவ சேர்க்கை கலந்தாய்வுக்கு குவியும் பாராட்டு


தமிழக முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயங்கி வருகின்றன. 105 அரசு கல்லூரிகளில் ஒரே சுழற்சியிலும் 59 கல்லூரிகளில் இரு சுழற்சி முறைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்க மாநில தலைவர் தங்கராஜ் கூறியதாவது,
     
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 107299 காலியிடங்கள் உள்ளன. இதில் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட வெளிப்படைத்தன்மையான பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட கலந்தாய்வு மூலம் 77985 இடங்கள் நிரம்பி உள்ளன. காலியாக உள்ள மாணவர் சேர்க்கைக்கான மீத இடங்களும் அடுத்த வாரம் நடைபெறுகின்ற கலந்தாய்வில் ஓரளவு நிறைவடைய வாய்ப்புள்ளது.அரசு கலை கல்லூரிகளில் பொதுவாக மாணவர் கலந்தாய்வு சுமார் 50 முதல் 60 முதல் 70 சதவீதம் மட்டுமே வெளிப்படை தன்மையுடன் மாணவ மாணவிகள் கலந்தாய்வு நடத்தப்படும். மீதமுள்ள கலந்தாய்வு அரசியல் கட்சித் தலைவர்களின் சிபாரிசுகள் என்ற பெயரில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என பாரபட்சம் இல்லாமல் அரசு கலை கல்லூரிகளில் கலந்தாய்வு நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த கல்வியாண்டில் கிட்டத்தட்ட 70% மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் இதுவரை கடைபிடிக்கப்படாத அளவிற்கு வெளிப்படைத்தன்மையுடன் தன்மையுடன் நடைபெற்று வருகிறது. இன்னும் காலியாக உள்ள பாட பிரிவு இடங்களும் வெளிப்படை தன்மையுடன் நடத்துவதற்கு தமிழக உயர் கல்வித் துறை முயற்சிகள் எடுத்து வருகிறது. குறிப்பாக வராண்டா அட்மிஷன் தேதி தொடர்பான செய்திகளை மட்டும் ஒரு சில கல்லூரிகளில் பெரும்பாலும் மாணவர்களுக்கு தகவல் பத்திரிக்கை செய்தி அறிவிக்காமல் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தெரியும் வண்ணம் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. அதையும் மீறி கிராமப்புற ஏழை மாணவ மாணவிகள் வராண்டா அட்மிஷன் நேரத்தில் கல்லூரிக்கு வந்தாலும் கூட அவர்கள் விரும்புகின்ற பாடப்பிரிவில் அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டில் காலிடங்கள் இருந்தாலும் கூட இது நாள் வரை ஒரு சில கல்லூரிகளில் அவர்களுக்கு சீட் கொடுக்காமல் பணம் தருபவர்களுக்கும் அரசியல் சிபாரிசுகளுக்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரி நிர்வாகம் கவனத்தை கொடுத்தது. பல ஆண்டுகளாக இதுதான் நடைபெற்று வருகிறது. வரண்டா அட்மிஷன் நேரத்தில் கலந்தாய்வுக்கு வருகின்ற மாணவர்கள் எண்ணிக்கை விட கல்லூரிக்கு வரண்டா அட்மிஷன் நேரத்தில் மட்டும் வருகின்ற வருகின்ற கரைவெட்டிகளின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது. அதுவும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி கூட்டணி கட்சி தேசிய கட்சி என்ற எந்தவித பாகுபாடும் இல்லாமல் நிரம்பி வழிகிறது. குறிப்பாக உயர் கல்வித் துறை செயலாளர்கள் அவர்களின் வழிகாட்டுதலின்படி புதியதாக பொறுப்பேற்று சிறப்பாக செயலாற்றி வரும் கல்லூரி கல்வி இயக்குனர் அவர்களும் அவர்களின் மேற்பார்வையில் இயங்கும் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அதிகாரிகளும் தங்களது பங்கிற்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வினை நேரடியாக கண்காணித்து வருகிறார்கள். ஒரு சில கல்லூரிகளில் இதுவரை நிரப்பிய அத்தனை மனத்திற்கு இடங்களையும் வெளிப்படை தன்மையுடன் தான் நிரப்பி உள்ளார்கள். இதனால் கல்லூரி முதல்வர்களும் துறைத்தலைவர்களும் சகப்பேராசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீதமுள்ள இடங்களையும் அவ்வாறே நிரப்ப கோரி கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் சாந்த கல்லூரி முதல்வருக்கு பெரும்பாலும் மாணவர் கலந்தாய்வினை வெளிப்படை தன்மையுடன் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதனால் கிராமப்புற ஏழை மாணவ மாணவிகள் இதுவரை இல்லாத அளவிற்கு பயன்பெற வாய்ப்புள்ளது. அதுவும் குறிப்பாக உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற திட்டத்தினை கடந்த ஆண்டு தான் இந்த அரசு கொண்டுவந்தது. இதனை வைத்து தனியார் கல்லூரிகளும் அதிகமான மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டு இருந்த சூழ்நிலையில் முறைகேடுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடமளிக்காத வகையில் சரியான இன சுழற்சி முறையை பின்பற்றி இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாய்வு நடத்தி வருவதற்கு பொதுமக்கள் மத்தியிலும் மாணவர்கள் சார்பாகவும் பணியாற்றுகின்ற அரசு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் சார்பாகவும் தமிழக உயர்கல்வித்துறைக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு 5 ம் தேதிக்குள் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுத்தது, இதுவரை இல்லாத வகையில் சுமார் 1700 கௌரவ விரிவுரையாளர்களை வெளிப்படைத்தன்மையுடன் பொது கலந்தாய்வு மூலம் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தது, அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் இடம் மாறுதல் வழங்கி வருவது, அதுமட்டுமில்லாமல் உடனடியாக 108 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாடம் நடத்துவதற்கு முதல் சுழற்சியில் 5699 கௌரவ விரிவுரையாளர்களுக்கும் இரண்டாம் சுழற்சியில் 1661 கௌரவ விரிவுரையாளர் இடங்களுக்கும் ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்தது பாராட்டதலுக்கு உரியது. அதேபோன்று கௌரவ விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வு பணி வரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகளையும் காலம் தாழ்த்தாமல் பரிசீலனை செய்ய வேண்டும். பணி மாறுதலுக்காக காத்துக் கொண்டிருக்கும் மீதமுள்ள கௌரவ விரிவுரையாளர்களுக்கும் அவர்களின் சொந்த இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு இடமாறுதல் கிடைத்திட அரசும் உயர் கல்வித் துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு அரசும் ஓட்டுக்கு கோடி கணக்கில் பணம் செலவு செய்யாமல் இது போன்ற செயல்முறைகளை திட்டங்களை இதுபோன்று நேரடியாக மக்கள் பலனடையும் வண்ணம் இயன்றவரை வெளிப்படை தன்மையுடன் செயலாற்றும்போது அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும். இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் இப்பொழுது சேர்ந்துள்ள மாணவ மாணவிகள் அனைவரும் வருங்கால பாராளுமன்ற தேர்தலில் கன்னி வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு பாடம் நடத்துபவர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் 7300 கௌரவ விரிவுரையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உயர் கல்வித் துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை வெளிப்படைத்தன்மையுடன் எடுத்து வருகின்ற தமிழக உயர்கல்வித்துறை அதிகாரிகள் அரசு கல்லூரிகளில் மீதமுள்ள மாணவர் சேர்க்கை இடங்களையும் இதே பாணியில் நடத்த நடத்த முயற்சி செய்து வருவதற்கு வேண்டுகோளினையும், பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தவரும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் தமிழக உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.