WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 23, 2023

கவுரவ விரிவுரையாளர்கள் 5,699 பேரை நியமித்து அரசாணை.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக துறையின் செயலர் கார்த்திகேயன் பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 5,699 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கலாம்.

இவர்களுக்கு 11 மாதங்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும். அதற்கான செலவினமாக ரூ.125 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரத்துக்கு நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.