WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 20, 2023

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சட்டக் கல்லூரி மற்றும் சென்னை பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர்கள் ஊதியத்திற்கு இணையாக ஊதியம் உயர்த்தி வழங்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை


தமிழகம் முழுவதும் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 7198 பணியிடங்களில் சுமார் 7000க்கும் அதிகமான கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர் சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 தமிழகத்தில் யுஜிசி பரிந்துரை சம்பளம் கேட்டு சுமார் 13 ஆண்டுகளாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராடி வருகின்றனர். ஆயினும் எதிர்பார்த்த உதவி உயர்வு கிடைக்காததால் தமது அன்றாட தேவையை பூர்த்தி செய்ய இயலாமல் கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் ஊதிய உயர்வு கோரிக்கையை தமிழக முதல்வர் அவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்திற்கு அருகிலுள்ள  கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதா கட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு தமிழகத்தை விட அதிகமான மாத சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது . 

ஆனால் தமிழகத்தில்   பணியாற்றி வரும் 7000 கௌரவ விரிவுரையாளர்களில் , சுமார் 5500க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் திமுக ஆட்சியில் தொகுப்பு ஊதியத்தில் நிரப்பப்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் கடந்த 10 ஆண்டுகளாக கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் பெருமளவு  கடந்த கால அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆயினும் மாறி மாறி ஆண்ட அரசுகள் கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளுக்கு  நிதி சுமையை காரணம் காட்டி பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை . இத்தகைய சூழ்நிலையில் தமிழக உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் சென்னை பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியம் 20,000 ரூபாயிலிருந்து 30 ஆயிரமாக  உயர்த்தி வழங்கப்படுவதாக 19.6.23 தேதியிட்ட சென்னை பதிவாளர் கடிதம் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

 எனவே தமிழகத்தின் உயர் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் ஊதியத்தினையும் தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாரதிதாசன் பாரதியார் மனோன்மணியம் சுந்தரனார் திருவள்ளுவர் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர் சங்கத்தின் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்களையும் மற்றும் மாண்புமிகு உயர் கல்வித் துறை செயலாளர்  மற்றும்  மாண்புமிகு கல்லூரி கல்வி இயக்குனர் உள்ளிட்ட உயர் கல்வித்துறை அதிகாரிகளையும் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வதாக தெரிவிக்க பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.