WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 19, 2023

23 புதிய சைனிக் பள்ளிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்: தனியார் பங்களிப்புடன் அமைக்க அழைப்பு.

 அரசு சாரா நிறுவனங்கள்/ தனியார் பள்ளிகள்/ மாநில அரசுகளுடன் இணைந்து 6-ம் வகுப்பு முதல் வகுப்பு வாரியாக 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அரசு சாரா நிறுவனங்கள்/ தனியார் பள்ளிகள்/ மாநில அரசுகளுடன் இணைந்து 6-ம் வகுப்பு முதல் வகுப்பு வாரியாக 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சியின் கீழ், சைனிக் பள்ளிகள் சங்கம் நாடு முழுவதும் அமைந்துள்ள 19 புதிய சைனிக் பள்ளிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த முன்முயற்சியின் மூலம் சைனிக் பள்ளி சங்கத்தின் கீழ் கூட்டாண்மை முறையில் செயல்படும் புதிய சைனிக் பள்ளிகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

100 புதிய சைனிக் பள்ளிகளை நிறுவுவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் பின்னால் உள்ள நோக்கங்கள், தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதும், ஆயுதப்படைகளில் சேருவது உட்பட அவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளை வழங்குவதும் ஆகும்.

இன்றைய இளைஞர்களை நாளைய பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றுவதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கத்துடன் கைகோர்த்து செயல்பட தனியார் துறைக்கு இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

மேற்குறிப்பிட்ட 23 அங்கீகரிக்கப்பட்ட புதிய சைனிக் பள்ளிகளின் மாநில / யூனியன் பிரதேச வாரியான பட்டியலை https://sainikschool.ncog.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம். இந்த புதிய சைனிக் பள்ளிகள், அந்தந்த கல்வி வாரியங்களுடன் இணைக்கப்படுவதைத் தவிர, சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ் செயல்படும்,

இப்பள்ளிகளின் செயல்பாட்டு முறைகள் குறித்த விவரங்களை https://sainikschool.ncog.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம். விருப்பமுள்ள மாணவர்களும் பெற்றோர்களும் இந்த புதிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.