பள்ளி மாணவர்களுக்கான, மணற்கேணி இணையதளத்தை, அமைச்சர் மகேஷ் நேற்று தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.
இந்த இணையதளத்தில், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாநில பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை, வீடியோ வடிவிலான விளக்கங்களுடன், கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் அளித்துள்ளது.
6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கான, அறிவியல், கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில், முதற்கட்டமாக பாடப் பொருள்கள், வீடியோவாக தரப்பட்டுள்ளன
ஒவ்வொரு வீடியோ முடிவிலும், வினாடி - வினா வாயிலாக, மாணவர்களின் புரிதல் திறனை சரி பார்க்கும் வசதி உள்ளது. இதன் வழியே மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நடத்திய பாடம், முறையாக புரிந்திருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ள முடியும்
முதல் கேள்வி எளிமையாக துவங்கி, படிப்படியாக விடை அளித்துக் கொண்டே வருகையில், கேள்விகளின் கடினத்தன்மை கூடிக் கொண்டே வரும்.
ஒவ்வொரு கேள்விக்குமான விரிவான விடைகளும் உள்ளன. ஏதேனும் ஓரிடத்தில் மாணவர்களுக்கு புரிந்து கொள்ள சிரமமாக இருந்தால், ஆங்காங்கே அவர்களுக்கான உதவி குறிப்புகளும் உண்டு
வீடியோக்கள், '2டி, 3டி' அனிமேஷன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கற்போர் உடனடியாக புரிந்து கொள்வதற்கும், புரிந்து கொண்டவற்றை, நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளவும் உகந்தவை. அனைத்து வீடியோக்களையும், கேள்விகளையும் கடவுச்சொல் இன்றி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதன் இணையதள முகவரி, https://manarkeni.tnschools.gov.in. மணற்கேணி மொபைல் செயலியை, பிளே ஸ்டோரில், 'TNSED Manarkeni' என, உள்ளீடு செய்து தேட வேண்டும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.