பிரான்ஸ் நாட்டில் உள்ள சி.இ.எம்.எச்.டி.ஐ.,-சி.என்.ஆர்.எஸ்., கல்வி நிறுவனம் ஊக்கத்தொகையுடன் கூடிய பிஎச்.டி., படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள மாணவர்கள் இந்த பிஎச்.டி. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களைப் பெற www.annauniv.edu/cir/pdf/cnrs.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம். இந்தப் படிப்புக்கு ஊக்கத்தொகையாக மாதம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மொத்தம் 36 மாதங்கள் கொண்ட பாடப்படிப்பாகும் இது.
கல்வித்தகுதிகள்: இந்தப் படிப்பில் சிறந்த மதிப்பெண்களுடன் இயற்பியல், கணிதம் துறையில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், எலக்ட்ரோமேக்னட்டிசம், ஆப்டிக்ஸ் அல்லது கணித துறையில் முதுநிலை பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க சுயவிபரம், முகப்பு கடிதம், பரிந்துரை கடிதம் மற்றும் கல்வி சான்றுகளுடன் cedric.blanchard@cnrs-orleans.fr எனும் இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இணையதள முகவரி: இந்தப் படிப்பு குறித்த கூடுதல் விவரங்களை www.annauniv.edu/cir/pdf/cnrs.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.
பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று பிஎச்.டி. உயர்கல்வியைப் படிக்க மாணவச் செல்வங்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு இது. எனவே இதை தகுதியுள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பிரான்ஸ் நாட்டின் ஆர்லியன்ஸில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் இதற்கு உதவி புரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.