WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 11, 2024

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62 ஆக உயர்கிறதா?: வதந்தி என தமிழக அரசு மறுப்பு.

 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60- லிருந்து 62 ஆக உயர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாவும், 15 நாட்களில் அரசாணை வெளியிடப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வெளியான தகவலை வதந்தி என தமிழக அரசு மறுத்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது, 2021-ம் ஆண்டு நிதி நெருக்கடியை காரணம் காட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒய்வு வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. அப்போதே, இளைஞர்கள் அரசுப் பணியில் சேருவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாக, பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலி்ல் திமுக வெற்றி பெற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றறது. ஆனால், ஒய்வு வயது குறைக்கப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆகவே உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில், நிதி நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, 60 லிருந்து 62 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. மேலும், இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி தலைமைச்செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 15 நாட்களில் அரசாணை வெளியிடப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதையடுத்து, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் இத்தகவல் அடிப்படையில், கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ‘‘இவ்வாறு வெளியாகும் தகவல் முற்றிலும் வதந்தியே. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.