பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் பணிக்கு தாமதமாக வருவதை தடுக்க, பயோமெட்ரிக் முறையை செயல்படுத்த, பல்கலைகளுக்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பல்கலைகளில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பணிக்கு தாமதமாக வருவதாகவும், உயர் அதிகாரியின் முன் அனுமதி பெறாமல், பல்கலையை விட்டு வெளியேறுவதாகவும் அரசின் கவனத்துக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, உயர் கல்வி துறை சார்பில், அனைத்து பல்கலைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், அலுவலர்கள் பணிக்கு தாமதமாக வருவதையும், உரிய அதிகாரியிடம் அனுமதி பெறாமல் அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
பல்கலைகள் சுமுகமாக செயல்படும் வகையில், அனைத்து பல்கலைகளிலும் பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் வருகையை உறுதி செய்வதற்காக, பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
இதில், பல்கலைக்குள் நுழையும் போதும், பணி முடிந்து வெளியேறும் போதும் பதிவுசெய்வது கட்டாயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.