அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகளை மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2025-26-ம் கல்வியாண்டில் மார்ச் 1-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும். அதன்படி 5 வயது நிறைந்த குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்த குடியிருப்புகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்டக் கல்வி அலுஇதுதவிர 2025-26-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை கணிசமான அளவில் அதிகரிக்கவும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி சேர்க்கை பணிகளை சிறந்த முறையில் நடத்த வேண்டும்.
குறிப்பாக அரசு பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், இணையதள வசதி, கையடக்க கணினி உட்பட பல்வேறு வசதிகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன. அதேபோல், தமிழக அரசின் நலத்திட்டங்கள், உதவித்தொகைகள் குறித்த விழிப்புணர்வை பெற்றோருக்கு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதை பின்பற்றி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.