WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, March 9, 2025

மாணவர்களே, தேர்வை திறம்பட எழுத வேண்டுமா?

 

தேர்வு என்​றாலே எங்​களுக்​குப் பய மாக இருக்​கிறது என்று பலர் சொல் ​வீர்​கள். அல்​லது நீங்​களே குழப் ​பிக்​கொள்​வீர்​கள். ஆனால் எல்லா பிரச் சினை​களுக்​கும் ஒரே தீர்வு - முறை​யான கல்வியைப் பெறு​தல் என்று சுவாமி விவே​கானந்​தர் கூறு​வார். படிப்​ப​திலேயே உங்​களுக்​குப் பிரச்​சினை இருக்​கிறது என்​றால் அதைத் தீர்ப்​ப​தற்கு கல்​வி​தான் ஒரு சரி​யான வழி​முறை​யாக அமை​யும்.

படித்​தது மறந்​து​விடு​கிறது என்று சொல்​கிறீர்​கள். ஆனால் ஒரு சினி​மாப் பாடலை ஒரு முறை கேட்​டாலே உங்​களுக்கு அதை முணு​முணுக்​கத் தோன்​றுகிறது அல்​ல​வா! உங்​களுக்கு மிக​வும் பிடித்த கிரிக்​கெட் வீரர் எத்​தனை ரன்​கள் குவித்​தார், எத்​தனை சிக்​ஸர் அடித்​தார் போன்ற தகவல்​களை ஒரு முறை கேட்​டதும் பலமுறை நினை​வுப்​படுத்​திக் கொள்​கிறீர்​கள், இதனால் அந்த ஸ்கோர் உங்​களுக்கு அத்​துபடி ஆகிறது.

உங்​களு​டைய மனதுக்​கும் மூளைக் ​கும் இந்​தத் திறமை​கள் இருக்​கின்​றன. யாருடைய சாதனையையோ நீங்​கள் மனதில் கொள்​ளும் போது, எதிர்​காலத்​தில் உங்​களுக்கு நல்ல வரு​மானத்​தை​யும் பெயரை​யும் புகழை​யும் தரப் போகின்ற இன்​றைய படிப்பை நீங்​கள் எப்​படி மறக்க முடி​யும்?
பிடித்​து​விட்​டால் சுகம், பிடிக்​கா​விட்​டால் சுமை என்ற ஒரு சூத்​திரம் படிக்​கும் விஷ​யத்​தில் 100% உண்​மை​யாக உள்​ளது. படிப்பு பிடிக்க வேண்​டும் என்​றால் அதற்கு ஐந்து விஷ​யங்களை நீங்​கள் பிடித்​துக் கொண்​டால் போதும்.

1. படிப்​பில் கவனம் வைத்​தல்: படிப்​பில் கவனம் வரு​வதற்​கு, நிறைய படிப் பவர்​களைக் கவனி​யுங்​கள். படிக்​கத் தொடங்​கும் முன்​பு, “இப்​போது நான் படிப்​ப​தன் மூலம், வாழ்க்​கை​யில் முன்​னேறப் போகிறேன். என் முன்​னேற்​றத்​துக்கு இது ஓர் அடித்​தள​மாக இருக்​கப் போகிறது” என்று உங்​கள் மனதுக்​குள் திரும்​பத் திரும்​பச் சொல்​லிக் கொள்​ளுங்​கள்.

மாணவக் கண்​மணி​களே, நீங்​கள் படிப்​ப​தில் கவனம் பெறு​வதற்கு முன்​பு, நண்​பர்​களு​டன் அரட்​டையடிப்​பது, ஊர் சுற்​று​வது என எவையெல்​லாம் உங்​கள் கவனத்​தைச் சிதைக்​கின்றன என்று ஒரு பட்​டியலிடுங்​கள். அவற்​றி​லிருந்து எப்​படி மீள்​வது என்று சிந்​தித்​து, மனதை திசை திருப்​புங்​கள்.
படிக்க அமர்​வதற்கு முன்பு

அ) கடவுளிடம், நான் நன்​றாகப் படிக்க வேண்​டும் என்று பிரார்த்​தனை செய்​யுங்​கள்.
ஆ) நிமிர்ந்து அமருங்​கள். ஐந்து முறை மூச்சை நன்​றாக உள்ளே இழுத்து வெளியே விடுங்​கள்.
இ) உடல், மனம், புத்தி ஆகிய மூன்று சக்​தி​களைப் பெற்ற ஒரு சக்​கர​வர்த்​தி​யாக உங்​களைக் கரு​திக்​கொண்டு படிக்க ஆரம்​பி​யுங்​கள். உங்​களது மனம் அலை​பாய்​வது நின்​று​விடும்.

2. படித்​ததைத் திரட்​டு​தல்: டி.​வி. அறையி​லிருந்து தள்ளி அமருங்​கள். செல்​போனை எடுத்​தால்​கூட பாடங்​களை மட்​டுமே படிப்​பேன் என்று உங்​களுக்கு நீங்​களே கட்​டளை​யிட்​டுக் கொள்​ளுங்​கள். உங்​களு​டைய பள்​ளி​யில், யாரெல்​லாம் நன்​றாகப் படிக்​கிறார்​களோ அவர்​களை மனதில் கொண்டு வாருங்​கள். அவர்​களைப் போன்று நானும் படிப்​பேன் என்று நினைத்​துப் பாருங்​கள்.

ஆசிரியரிடம் கற்​று, நீங்​கள் புரிந்​து​கொண் டதை, இன்​னொரு​வருக்கு சொல்​லும்​போது நீங்​கள் எப்​படிச் சொல்​வீர்​கள்? அந்​தத் திறமை உங்​களுக்​குள் வர வேண்​டும். இதை நன்​றாகச் செய்து பாருங்​கள் நீங்​களே ஒரு மாணவ​ராக​வும் ஆசிரிய​ராக​வும் வளர்​வீர்​கள். பாடங்​களைப் புரிந்​து​கொண்டு படிக்​கும் திறமை, அதில் உள்ள சுவை உங்​களுக்கு வாய்த்​து​விட்​டால் படிப்​பது பெரும் உற்சாகத்​தைத் தரும்.

3. படித்​ததை நினைவு கூர்​தல்: உங்​கள் அம்மா சமைப்​ப​தைப் பார்த்​திருப்பீர்​கள். காய்​கறிகளை நறுக்​கிப் பாத்​திரத்​தில் வேக வைக்​கும்​போது அவ்​வப்​போது அம்மா அதைக் கிளறிக் கொடுப்​பார். அது​போல் நீங்​கள் நன்​றாகப் படித்த பாடங்​களை அடிக்​கடி உங்​கள் மனதில் கொண்டு வாருங்​கள். அப்​படிக் கொண்டு வரு​வதன் மூலம் அதனை நீங்​கள் உள்​வாங்​கு​கிறீர்​கள். பாடங்​களை வாய்​விட்​டுப் படி​யுங்​கள். பலமுறை எழு​திப் பாருங்​கள். இந்த இரண்டு பயிற்​சிகளும் மறதியை விரட்​டி​விடும். எழு​திப் பார்த்​தால் எழுதும் திறனும் மேம்​படும்.

4. படித்​ததை மனதில் தேக்​கி​வைத்​தல்: மனதில் அடிக்​கடி பாடங்​களை நினை​வு​கூர் வதன் மூலம், உங்​கள் மனதில் அந்​தப் பாடங் கள் ஓர் ஆழமான இடத்​தைப் பிடிக்​கும். உங்​கள் மனதின் சக்​தி, அதன் நினை​வாற்​றல் உங்​களுக்​குத் தெரி​யு​மா? யாராவது உங்​களைத் திட்​டி​விட்​டால் எத்​தனை ஆண்​டு​களா​னாலும் அதை நீங்​கள் மறப்​ப​தில்​லை. அந்​தச் சாதா​ரணப் பண்பை ஏன் உங்​கள் மேம்​பாட்​டுக்​காக நீங்​கள் பயன்​படுத்​தக் கூடாது? சுவாமி விவே​கானந்​தர் ஒன்றை ஒரு முறை படித்​தால் போதும், ஆயுள் உள்​ளவரை அதை மறக்​கவே மாட்​டார். அதற்கு அவர் மிகுந்த முக்​கி​யத்​து​வம் கொடுக்​கிறார்.

5. திறமை​களை வெளிப்​படுத்​துதல்: ஒரு பிரசன்​டேஷன் கொடுக்​கும்​போது எப்​படி நீங்​கள் உங்​களைத் தயார்​படுத்​திக் கொண்டு செய்​வீர்​களோ, அப்​படி தேர்வு சமயத்​தில் செய்ய வேண்​டும். பலர் சிரமப்​பட்​டுப் படிக்​கிறார்​கள். ஆனால் தேர்​வில் கேள்வி​களைச் சற்று மாற்​றிக் கேட்​டாலே போதும், தடு​மாறி விடு​கிறார்​கள். சிந்​தித்​து, புரிந்​து​கொண்டு படிப்​பவர்​கள் இந்​தப் பிரச்​சினையை சர்வ சாதா​ரண​மாக சமாளிப்​பார்​கள். கடைசி​யாக இதை நினை​வில் கொள்​ளுங்கள். தேர்​வுக்கு முன்பு உங்​களது உடல் தகு​தி, மனதின் தெளிவு, புத்​தி​யின் வேகம் ஆகிய மூன்​றும் முக்​கி​யம். உடலுக்​குக் காய்ச்​சல் வராமல் பார்த்​துக் கொள்​ளுங்​கள். சுறுசுறுப்​பாக இருங்​கள், சோர்வு வந்து விடக் கூடாது.

இப்​போது மேற்​கூறிய ஐந்து நிலைகளி​லும் கவனம், ஆர்​வம், பொறுப்​பு, செயல்​திறன் ஆகிய​வற்​றுடன் ஒரு​வர் ஈடு​படும் ​போது மதிப்​பெண்​கள் அவர் பின்​னால் வரும். மறதி இருக்​காது, நினை​வாற்​றல் தகதக வென ஜொலிக்​கும். அறிவு அவர்​களது வசமாகும். புகழ் அவர்​களுக்கு சேவை செய்​யக்​ காத்​திருக்​கும்​. அப்​படிப்​பட்​ட சாதனை மாணவர்​ களாக நீங்​கள்​ ஒவ்​வொரு​வரும்​ வர வேண்​டும்​ என்​று எல்​லாம்​வல்​ல இறைவனிடம்​ பி​ரார்​த்​தனை செய்​து கொள்​கின்​றேன்​.


- சுவாமி விமூர்த்தானந்தர்


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.