WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 11, 2025

இடைநிலை ஆசிரியர்கள் 2,342 பேர் பணி நியமனம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

 


அரசுப் பள்​ளி​களில் 2,342 இடைநிலை ஆசிரியர்​கள் பணிநியமனத்​துக்​கான வழி​காட்டு நெறி​முறை​களை பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: அரசுப் பள்​ளி​களில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணி​யிடங்​களுக்கு ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) மூலம் நடத்​தப்​பட்ட போட்​டித் தேர்​வில் தகுதி பெற்று மதிப்​பெண்​கள் மற்​றும் இனச்​சுழற்சி அடிப்​படை​யில் தேர்வு செய்​யப்​பட்ட 2,342 பேர் கொண்ட தேர்​வுப் பட்​டியல் பெறப்​பட்​டுள்​ளது.

இவர்​களுக்​கான நேரடி பணி நியமன கலந்​தாய்வு சென்​னை​யில் நடத்​தப்​பட்டு ஆணை வழங்​கப்​பட​வுள்​ளது. அத்​துடன் தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களின் வீட்டு முகவரி​யுடன்​கூடிய பெயர்ப் பட்​டியல் அனைத்து மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்பி வைக்​கப்​பட்​டது. அதன் பொருட்டு இடைநிலை ஆசிரியர் பணி​யிடத்​துக்கு தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு ஜூலை 14 முதல் 18-ம் தேதி வரை சென்னை சேத்​துப்​பட்டு எம்​சிசி பள்​ளி, கீழ்ப்​பாக்​கம் சிஎஸ்ஐ பெயின்ஸ் மெட்​ரி​குலேஷன் பள்ளி ஆகிய இரு பள்​ளி​களில் நேரடி முறை​யில் இட ஒதுக்​கீட்​டுக்​கான கலந்​தாய்வு நடை​பெறவுள்​ளது.

முதல்வர் வழங்குவார்: னவே, ஆசிரியர் பணி​யிடங்​களுக்கு தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​கள் முன்​னுரிமைப் பட்​டியல் வரிசைப்​படி கலந்​தாய்வு நடை​பெறும் நேரத்​துக்கு முன்​பாகவே மையத்​துக்கு வரு​கை புரிய வேண்​டும். தாமத​மாக வருபவருக்கு அந்த நேரத்​தில் உள்ள காலிப்​பணி​யிடங்​களுக்கு மட்​டுமே தேர்​வுசெய்து கொள்ள அனு​ம​திக்​கப்​படும். இதையடுத்து ,பணிநியமனம் பெறு​பவருக்கு முதல்​வர் ஸ்​டா​லின் நியமன ஆணை​களை வழங்​கு​வார். அந்த விழா சென்னை பெரியமேடு நேரு உள் விளை​யாட்டு அரங்​கில் ஜூலை 23-ம் தேதி நடை​பெறும். இவ்​வாறு தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநரகம் அனுப்பிய சுற்றறிக்கையில்​ கூறப்​பட்​டு உள்​ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.