WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 2, 2025

பள்ளி கல்வித்துறை பணியாளர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு: ஜூலை 8, 9-ம் தேதிகளில் நடைபெறுகிறது.


 



ஒருங்​கிணைந்த பள்​ளிக் கல்​வித்​துறை​யில் பணிபுரி​யும் ஊழியர்​களுக்கு விருப்ப மாறு​தல் கலந்​தாய்வு ஜூலை 8, 9-ம் தேதி​களில் நடை​பெற உள்​ளது.

இதுகுறித்து ஒருங்​கிணைந்த பள்​ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்​குநர் மா.ஆர்த்​தி,அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: இந்த துறை​யில் பணி​யாற்​றும் தொகுப்​பூ​திய ஊழியர்​களுக்கு மனமொத்த மாறு​தல் வழங்​கப்​பட்டு வரு​கிறது. அதன்​படி ஒருங்​கிணைந்த பள்​ளிக் கல்வி அலு​வல​கம், மாவட்ட திட்ட அலு​வல​கம் மற்​றும் வட்​டார வள மையங்​களில் பணிபுரி​யும் தொகுப்​பூ​திய பணி​யாளர்​களுக்கு காலி​யாக உள்ள இடங்​களுக்கு மாறு​தல் வழங்​கப்பட உள்​ளன. இதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை பின்​பற்றி விருப்ப மாறு​தல் வழங்க நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும்.



அதன்​படி மாவட்​டத்​துக்​குள் மற்​றும் மாவட்​டம் விட்டு மாவட்​டம் மாறு​தல் கோரும் தொகுப்​பூ​தி​யப் பணி​யாளர்​கள் விண்​ணப்​பத்தை பூர்த்தி செய்து ஜூலை 4-ம் தேதிக்​குள் சமர்​ப்பிக்க வேண்​டும். பெறப்​பட்ட விண்​ணப்​பங்களை முதன்​மைக் கல்வி அலு​வலர் தலை​மை​யில் குழு அமைத்து பரிசீலிக்க வேண்​டும்

அதன்​பின் மாவட்​டத்​துக்​குள் காலி​யாக உள்ள இடங்​களுக்கு ஜூலை 8-ம் தேதி​யும், மாவட்​டம் விட்டு மாவட்​டம் உள்ள இடங்​களுக்கு ஜூலை 9-ம் தேதி​யும் அனுப்பி வைக்க வேண்​டும். இதுத​விர பணி​மாறு​தல் பெற்ற ஊழியர்​களை ஜூலை 31-ம் தேதிக்​குள் பணி​விடு​விப்பு செய்ய வேண்​டும். மாறு​தலுக்கு விண்​ணப்​பிப்​பவர்​கள் தற்​போதைய பணி​யிடத்​தில் ஓராண்டு பணி​யாற்​றி​யிருக்க வேண்​டும். ஒரே பணி​யிடத்​துக்கு பலர் விண்​ணப்​பித்​தால் முன்​னுரிமை அடிப்​படை​யில் அதை ஒதுக்​கீடு செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.