பள்ளி மாணவர்களின் ஆரோக்கிய வாழ்வை முன்னிறுத்தும் நோக்கத்தில் தமிழக அரசு பள்ளிகளில் சமீபத்தில் அறிமுகமாகியுள்ள ‘வாட்டர் பெல் இடைவேளை’ திட்டம் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது. அதேபோல, மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் “ஃபிட் பெல் இடைவேளை” (Fit Bell Interval) என்ற புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கல்வியை தாண்டி, உடல் மற்றும் மன ஆரோக்கியம் கொண்ட வகுப்பறைகள் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கும் இன்றைய கல்விச் சூழலில் “ஃபிட் பெல் இடைவேளை” என்ற உடல் ஆரோக்கிய திட்டம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று மிக அவசியமாகிறது.
பள்ளிகளில் தொடர்ந்து உட்கார்ந்து கற்கும் சூழலில் உடற்பயிற்சிகள் அவர்களுடைய ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதோடு, பழக்க வழக்கங்களில் தூய்மை, நுண்ணறிவு வளர்ச்சி, மன ஒழுங்கு ஆகியவற்றை சாத்தியப்படுத்தும் என்றும், பள்ளி மாணாக்கர்களின் உடல் நலம், மன ஓய்வுத்திறன் மற்றும் வகுப்பறை கவனத்தை மேம்படுத்தும் நோக்குடன், தமிழக அரசு பள்ளிகளில் ’ஃபிட் பெல் இடைவேளை’ என்ற புதிய முயற்சியை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு இந்திய பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் சங்கத்தின் வெ. கிருஷ்ணகுமார் கூறியதாவது” வாட்டர் பெல் இன்டெர்வல் திட்டத்தை தொடர்ந்து மாணவர்களின் இயக்கமின்மை, உடல்நலக் குறைபாடுகள், கவனச்சிதறல் போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய, இத்தகைய சிறிய மற்றும் கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சி இடைவேளைகள் அவசியமாக‘ஃபிட் பெல் இடைவேளை’ என்பது, பள்ளி நேரத்தில் நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 முறை வரை, தலா 3–5 நிமிடங்கள் நீடிக்கும் எளிய உடற்பயிற்சிகளை வகுப்பறையில் இருந்தே செய்யும் திட்டமாக இருக்கும். இதில் தசைகளை நீட்டும் பயிற்சிகள் (stretching), நடத்தல், ஆழமான மூச்சுப் பயிற்சி அல்லது மெதுவான அசைவுகள் இடம்பெறும். இந்த பயிற்சிகளுக்கு தனி உடை, கூடுதல் இடம் அல்லது கருவிகள் தேவையில்லை.
இத்தகைய செயல் திட்டங்கள் உலகெங்கும் பல இடங்களில் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளன. பின்லாந்தில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சிறிய உடல் இயக்க இடைவேளை வழங்கப்படுகிறது. ஜப்பானில், ‘ரேடியோ டைசோ’ என்ற திட்டம் அந்த நாட்டளவில் நடைமுறையில் உள்ள தினசரி உடற்பயிற்சி திட்டம் ஆகும்,
இது பள்ளிகளிலும், வேலைத்தளங்களிலும் கட்டாயமாக பின்பற்றப்படுகிறது. இங்கிலாந்தில், ‘The Daily Mile’ என்ற திட்டம் மாணவர்களுக்குத் தினமும் நடக்க அல்லது ஓடச் செய்யும் செயல்திட்டமாக உள்ளது. அமெரிக்காவில், ‘Active Classrooms’ திட்டங்கள் வகுப்பறையில் சிறு இயக்கங்கள் மூலம் மாணவர்களின் ஃபிட்னெஸ் ஆர்வத்தை வளர்க்கின்றன.
எனவே, ‘ஃபிட் பெல் இடைவேளை’ திட்டம் வழியாக, தமிழ்நாடு பள்ளிகளில் உடல் திறனை கல்வியில் ஒரு அங்கமாக மாற்ற முடியும். இம்முயற்சி, ஒவ்வொரு மாணவரின் கல்விப் பயணத்தில் இயக்கத்தை அத்தியாவசியமாகவும், மகிழ்ச்சியான பழக்கமாகவும் மாற்றும் நல்லதொரு தொடக்கமாக அமையும்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.வும், பயனுள்ளதாகவும் அமையும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.