WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 2, 2025

அரசு கல்லூரிகளில் 560 கவுரவ விரிவுரையாளர்கள்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்.

 

அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் கவுரவ விரிவுரை​யாளர் பணிக்கு 560 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்களது பெயர் பட்​டியல் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக அமைச்​சர் கோவி.செழியன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஏழை, எளிய மாணவர்​கள் உயர்​கல்வி பெற வேண்​டும், அனை​வருக்​கும் சமமான உயர்​கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்​டும் என்​ப​தற்​காக, நடப்பு கல்வி ஆண்​டில் மட்​டும் புதி​தாக 15 அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. மாணவர்​களின் தேவைக்​கேற்ப, கலை, அறி​வியல் கல்​லூரி​களில் பல்​வேறு பாடப் பிரிவு​களில் புதி​தாக 15 ஆயிரம் இடங்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

இதில் நிரந்தர உதவி பேராசிரியர்​கள் பணி​யமர்த்​தப்​படும் வரை, மாணவர்​களின் கற்​றலில் தொய்வு ஏற்​ப​டா​மல் இருக்க, கவுரவ விரிவுரை​யாளர்​களை தற்​காலிக​மாக நியமிக்க, இணை​யதள விண்​ணப்ப பதிவு கடந்த ஜூலை 21-ம் தேதி தொடவிண்​ணப்​ப​தா​ரர்​களில் தகு​தி​யானவர்​களுக்கு ஆகஸ்ட் 18 முதல் 28 வரை அந்​தந்த மண்​டலங்​களில் நேர்​காணல் நடத்​தப்​பட்​டது. நேர்​காணல் முடிந்​துள்ள நிலை​யில், தேர்வு செய்​யப்​பட்​டுள்ள 560 தற்​காலிக கவுரவ விரிவுரை​யாளர்​கள் பட்​டியல், இணை​யதளத்​தில் (tngasa.org) வெளி​யிடப்​பட்​டுள்​ளது.ங்​கப்​பட்​டு, விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டன.

தேர்​வானவர்​கள் தங்​களது பயனர் குறி​யீடு (User ID), கடவுச்​சொல் (Password) பயன்​படுத்​தி, தாங்​கள் தேர்​வான கல்​லூரி மற்​றும் விவரங்​களை பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். சம்​பந்​தப்​பட்ட கல்​லூரி​யில் செப்​டம்​பர் 8-ம் தேதிக்​குள் அவர்​கள் பணி​யில் சேர வேண்​டும்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.