கல்வித்துறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏ.ஐ., தொழில்நுட்ப பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், அதற்கான ஆசிரியர்கள், ஹைடெக் லேப்களில் வசதி இல்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 'செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் இணையக் கருவிகள் அறிவுத் திட்டம்' (டி.என்.,ஸ்பார்க்) துவக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்பு மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,), கோடிங், இணையக் கருவிகள் உள்ளடக்கம் கொண்ட பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவ்வகுப்புகளை நடத்த தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கவில்லை.
மேலும் மதுரை மாவட்டத்தில் 72 பள்ளிகள் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கிராமப்புற பள்ளிகளில் பி.எஸ்.என்.எல்., நெட் வசதி கிடைக்கவில்லை என புகார் உள்ளது. அதேசமயம் திட்டங்களை செயல்படுத்த உத்தரவு பிறப்பிப்பதில் மட்டும் குறியாக உள்ளனர் என தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.