தமிழகத்தில், 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரிக்கையை வலியுறுத்தி, பத்தாயிரம்க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதால், பெரும்பாலான பள்ளிகளில் வகுப்புகள் முடங்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தொடக்க கல்வியில், இரண்டாயிரத்து ஒன்பது ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்ட 20,000 ஆசிரியர்களுக்கு சம்பள முரண்பாடு உள்ளது. இதை சரிசெய்ய வலியுறுத்தி, பதினாறு ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
டிச., 26 முதல் தொடர் போராட்டங்களை அறிவித்து, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் முற்றுகை, மனித சங்கிலி, மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், தினம் தொள்ளாயிரம்க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்கின்றனர்.
அரையாண்டு தேர்வு முடிந்து ஜன., 5 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுதும் இடைநிலை ஆசிரியர்கள் 10,000க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு செல்லாமல், அந்தந்த மாவட்ட சி.இ.ஓ., அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், பணிக்கு செல்லாதவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டு உள்ளார். ஆனாலும், ஆசிரியர்களின் போராட்டம் தொடர்வதால், பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலர் ராபர்ட் கூறியதாவது:
மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, அரையாண்டு விடுமுறையை தியாகம் செய்து போராட்டத்தை துவக்கினோம். பள்ளி திறக்கும் வரையும் எங்களை அழைத்து பேசவில்லை.
தற்போது பள்ளிகள் திறந்து மாணவர்களுக்கு கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தான் இதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.