அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தொடர்வதால், அரசு பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
அரசு பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இடைநிலை ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். தமிழகத்தில், 60,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றும் நிலையில், 2006 ஜூன் மாதத்துக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கும், அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும் வெவ்வேறு ஊதிய விகிதம் உள்ளது.
இந்த வேறுபாட்டை களைந்து, சம வேலைக்கு சம ஊதியம் என்ற நிலையில், அனைவருக்கும் ஒரே மாதிரியான அடிப்படை சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று, 10வது நாளாக, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனை முன் உள்ள சுவாமி சிவானந்தா சாலையில், 1,000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், அவர்கள் கைது செய்யப்பட்டு, பல்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலர் ராபர்ட் கூறியதாவது:
எங்களுக்கு தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து விட்டு, தற்போது அரசு ஏமாற்றுகிறது. அதற்காக போராடும் எங்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் இடம் தர மறுக்கிறது.
இதுவரை, எங்களிடம் யாரும் பேச்சு நடத்தவில்லை. அதனால், இன்று பள்ளி திறக்கும் நிலையில், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து, அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் போராடுவர். அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால், நாங்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.