WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, April 4, 2026

அங்கன்வாடி மையங்களை தத்தெடுக்க வேண்டும்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு.

 

மத்​திய அரசின் அறி​வுறுத்​தலின்​படி நாடு முழு​வதும் உள்ள பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் கல்​லூரி​கள் அருகே இருக்​கும் 5 அல்​லது 6 அங்​கன்​வாடி மையங்​களை தத்​தெடுக்க வேண்​டும். அங்​குள்ள குழந்​தைகளுக்கு தரமான கல்​வி, பராமரிப்பு கிடைக்க உதவ வேண்​டும். இந்த சமூகப் பணி​களை மாணவர்​களின் பாடத் திட்​டத்​துடன் இணைக்க வேண்​டும்.

3 முதல் 6 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகளுக்​கான ஆரம்​பக்கல்​வியை மேம்​படுத்​தவே இந்த முன்​னெடுப்பு மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. அங்​கன்​வாடி மையங்​களுக்கு மாணவர்​கள் சென்று களப்​பணி​களில் ஈடு​படலாம். இது மாணவர்​களுக்கு அனுபவ ரீதி​யான கற்​றல் மற்​றும் சமூகப் பொறுப்​புணர்​வை​யும் உரு​வாக்​கும்.

மேலும் அங்​கன்​வாடி மையங்​களுக்கு தொடர்ச்​சி​யான கல்வி மற்​றும் கள ரீதி​யான வழி​காட்​டு​தலை உயர்​கல்வி நிறு​வனங்​கள் வழங்க வேண்​டும். எனவே, உயர்​கல்வி நிறு​வனங்​கள் சமூக மேம்​பாட்டு நடவடிக்​கை​களின் ஒரு பகு​தி​யாக அங்​கன்​வாடிகளு​டன் இணைந்து செயல்பட வேண்​டும். பல்​கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி, அனைத்து வித​மான உயர்​கல்வி நிறு​வனங்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கையில் இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.