சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ், 2026 - 27ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணைகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக செப்டம்பர் மாத இறுதி வாரத்தில், தேர்வு அட்டவணை தேதிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிடும், பிறகு அக்டோபர் - நவம்பரில் இறுதி அட்டவணை வெளியிடப்படும் என்பதால், மாணவர்கள், பெற்றோர் மத்தியில் தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு cbse.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அதனால், அட்டவணை வெளியானதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கமாக 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரை பத்து மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில், உத்தேச பட்டியல் வெளியாகும். அதில், தேர்வு நடைபெறும் நேரம், செயல்முறைத் தேர்வுகள் குறித்த விவரங்கள் வெளியாகும். பிறகே, தேர்வு அட்டவணை வெளியாகும். அனைத்துமே அதிகாரப்பூர்வ இணையதளத்தில்தான் வெளியிடப்படும்.
வரும் 2027 ஆம் ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் மொத்தமுள்ள 204 பாடங்களுக்கு நடைபெறும் பொதுத் தேர்வை, சுமார் 45 லட்சம் மாணவர்கள் எழுதவிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.