WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, September 19, 2026

மாணவியருக்கு பாலியல் தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் 'போக்சோ' வில் கைது.


மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, ஓவிய ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ், உடுமலை மகளிர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில், திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், கடந்த, ஜூன் மாதம், பாலியல் புகார்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்துள்ளது. அதில், அங்கு பயிலும் மாணவியர், ஓவிய ஆசிரியர் மதன் குமார், பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

அப்போது, தலைமையாசிரியர், அவரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த, 10ம் தேதி நடந்த வகுப்பு கூட்டத்தின் போது, மாணவியர், மீண்டும் சம்பந்தப்பட்ட ஓவிய ஆசிரியர், பாலியல் தொல்லை தருவதாக தெரிவித்துள்ளனர்.


இது குறித்து தலைமை ஆசிரியர் மாரியப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் தெரிவித்தார். இது தொடர்பாக, 15ம் தேதி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், சிறப்பு சிறார் காவல் அலகு அலுவலர்கள், பள்ளிக்கு நேரில் வந்து, மாணவியரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.


அதில், ஓவிய ஆசிரியர் மதன்குமார், மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தலைமை ஆசிரியர் மற்றும் சிறப்பு குழுவினர் அளித்த புகாரின் பேரில், உடுமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓவிய ஆசிரியர் மதன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.