WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 28, 2026

5 மாதங்களில் 4,400 பள்ளிகளுக்கு ஒப்புதல்: பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை.

 

தமிழகத்​தில் இணை​ய​வழி விண்​ணப்ப நடைமுறை அமலுக்கு வந்த 5 மாதங்​களில், தனியார் பள்​ளி​களின் 4,400 விண்​ணப்​பங்​களுக்கு பள்​ளிக் கல்​வித்துறை ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது.

தமிழகத்​தில் தனியார் பள்​ளி​கள் அங்​கீகாரம் புதுப்​பித்​தல், புதிய பள்​ளி​கள் தொடங்​குதல், தடை​யில்லாச் சான்று (என்​ஓசி) உள்​ளிட்ட விண்​ணப்​பங்​களைக் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் இணை​ய​வழி​யில் சமர்ப்​பிக்​கும் நடைமுறையைத் தமிழக அரசு கொண்டு வந்​தது. அனுமதி வழங்​கு​வதில் வெளிப்​படைத்​தன்​மையை உறுதி செய்​ய​வும், முறைகேடுகளைத் தவிர்க்​கவும் இத்​திட்​டம் அமலுக்கு கொண்டு வரப்​பட்​டது.

இதற்கு தனியார் பள்​ளி​கள் மத்​தி​யில் பரவலாக வரவேற்பு கிடைத்​தது. புதிய நடைமுறை​யின்​படி நடப்பு கல்​வி ஆண்​டில் (2026-27) ஜூலை முதல் நவம்​பர் வரை ஒப்​புதல் அளிக்​கப்​பட்ட விண்​ணப்​பங்​களின் விவரங்​கள் தற்​போது வெளியாகி​யுள்​ளன.

அதன்​படி 4,180 விண்​ணப்​பங்​கள் புதுப்​பித்​தலுக்​கும், 105 விண்​ணப்​பங்​கள் புதிய பள்​ளி​கள் தொடங்​கவும், 96 விண்​ணப்​பங்​கள் தற்​காலிக அங்​கீகார அனுமதி பெறவும், 19 விண்​ணப்​பங்​கள் தரம் உயர்த்​தவும் என மொத்​தம் 4,400 விண்​ணப்​பங்​கள் கடந்த 5 மாதங்​களில் பெறப்​பட்டு அதற்​கான ஒப்​புதலை பள்​ளிக் கல்​வித் துறை வழங்​கி​யுள்​ளது.

இதில் அதி​கபட்​ச​மாக மெட்​ரிக் பள்​ளி​களில் 2,229 விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்டு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது. நர்​சரி, பிரைமரி பள்​ளி​களில் 1,504 விண்​ணப்​பங்​களுக்​கும், சிபிஎஸ்இ பள்​ளி​களில் 420 விண்​ணப்​பங்​களுக்​கும் ஒப்​புதல் வழங்​கப்​பட்​டுள்​ளது. மேலும், ஜூலை முதல் நவம்​பர் மாதம் வரையான காலக்​கட்​டங்​களில் 105 பள்​ளி​கள் புதிதாக திறக்க ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் சுமார் 50 சதவீதம் சிபிஎஸ்இ பள்​ளி​கள் என பள்​ளிக் கல்​வித்துறை சார்​பில் தகவல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.