WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 14, 2026

தேர்வு முறைகேடுகளை தடுக்க முன்னாள் ராணுவ வீரர்களை பார்வையாளராக நியமிக்க முடிவு.

 

'நீட்' எனப்படும், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க, தேர்வு மையங்களில் சுதந்திரமான பார்வையாளர்களாக ஓய்வு பெற்ற ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரை நியமிக்க என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது.

என்.டி.ஏ., அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நீட், ஜே.இ.இ., உட்பட பல்வேறு தேசிய அளவிலான நுழைவு மற்றும் தகுதித் தேர்வுகளை நடத்தி வருகிறது. நடப்பாண்டு தொடக்கத்தில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அத்தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், மறுத்தேர்வும் நடத்தப்பட்டது.

இதே போல் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' என்ற மென்பொருள் குளறுபடியால் லட்சக்கணக்கான மாணவர்களின் மதிப்பெண்களில் பெரும் தவறுகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து, அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.

இந்நிலையில், தேர்வு முறையை முழுமையாக சீரமைக்கும் பணிகளை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, சுதந்திரமான பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிரந்தரக் குழுவை உருவாக்கி வருகிறது. இதில், ஆயுதப்படை மற்றும் துணை ராணுவப்படையில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோர் இடம்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்வு மையத்திலும் நகர ஒருங்கிணைப்பாளர், மைய கண்காணிப்பாளர் ஆகியோர், இந்த அமைப்பின் நேரடி பார்வையாளர்களாக செயல்படுவர் எனவும் கூறப்படுகிறது. தேர்வு நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் நடப்பதை கண்காணித்து, நேரடியாக தேசிய தேர்வு முகமைக்கு அறிக்கை அளிப்பதே இவர்களின் முக்கியப் பணியாகும். இதற்கான விண்ணப்பங்களை, வரும் டிசம்பர் 6ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பார்வையாளர்களை நியமிப்பதோடு மட்டுமின்றி, தகுதியான உட்கட்டமைப்பு வசதி கொண்ட கல்வி நிறுவனங்களைத் தேர்வு மையங்களாக இணைக்கவும் என்.டி.ஏ., விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.