WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 23, 2014

1,408 பேருக்கு ஆசிரியர் பணி: அமைச்சர் சுப்ரமணியன் தகவல்

''ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், காலியாக
உள்ள, 1,408 ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்,'' என, அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

இது குறித்து, சட்டசபையில் நடந்த விவாதம்:

மா.கம்யூ., டில்லிபாபு:
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளை விசாரிக்க, மாவட்டம்தோறும், தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் சுப்ரமணியன்:
ஏற்கனவே, நான்கு நீதிமன்றங்கள் உள்ளன.
 .கம்யூ., லிங்கமுத்து:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் உள்ள, காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
 அமைச்சர்:
1,096 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில், 1.27 லட்சம் பேர்; 301 பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில், 31,594 பேர் படிக்கின்றனர். இப்பள்ளிகளில், 11,412 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன; 10,004 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தற்போது, 1,408 ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் காலியாக உள்ளன. அவற்றையும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், விரைவில் நிரப்ப, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
  புதிய தமிழகம் கிருஷ்ணசாமி:
நலத்துறை பள்ளிகளில், கல்வி அதிகாரிகள் ஆய்வுக்கு செல்வதில்லை. வருவாய் துறை அதிகாரிகள் தான் செல்கின்றனர். இதனால், இப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. இதை தடுக்க, நலத்துறை பள்ளிகளை, கல்வித்துறையோடு இணைக்க வேண்டும்.
 அமைச்சர்:
தேர்ச்சி விகிதம், ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, 10ம் வகுப்பில், 82 சதவீத பேர், பிளஸ் 2 தேர்வில், 82 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு, விவாதம் நடந்தது.

3 comments:

  1. Any chance to increase the PG vacancies?

    ReplyDelete
    Replies
    1. Court orders awaited to give appointment letters to TRB candidates
      Last Updated: Wednesday, July 23, 2014, 13:00

      Chennai: The Tamil Nadu government is awaiting court orders to release the final results of exams conducted by Teachers Recruitment Board (TRB) and the eventual issuance of appointment orders to successful candidates, the Assembly was informed on Wednesday.


      Replying to a special call attention motion brought by CPI(M) leader K Bala Bharathi, School Education Minister KC Veeramani said a total of 72,701 persons have qualified in the exams conducted by TRB in 2013 and their certificates had already been verified.

      Since some candidates have filed cases in Madras High Court and its Madurai Bench, there has been a delay in giving appointment orders, he said, since the cases were disposed in the courts the government was awaiting court orders to issue appointment letters to candidates.
      From Z tv news

      Delete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.