WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 23, 2014

விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க "TRB"தீவிரம்..!

போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து
விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது.
அதிக வேலை பளு:
டி.ஆர்.பி., நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும், அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கும் முறை, தற்போது அமலில் உள்ளது. இந்த முறை, டி.ஆர்.பி.,க்கு அதிக வேலை பளுவை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஒவ்வொரு தேர்வுக்கும், லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதனால், லட்சக்கணக்கான விண்ணப்பங்களை அச்சடித்து, மாநிலம் முழுவதும், முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டி உள்ளது.
இணையதளம்:
இந்நிலையை மாற்றி, எளிமையான முறையில், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது, டி.ஆர்.பி., தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இணைய தளம் வழியாக, விண்ணப்பதாரர், எளிதில் விண்ணப்பிக்க முடியும். இதனால், கட்டணமும், வெகுவாக குறையும். விண்ணப்ப கட்டணம், 500 ரூபாயாக உள்ளது. இதுவே, இணையதள முறைக்கு மாறினால், பதிவு கட்டணமாக, மிக குறைந்த தொகையை வசூலிக்க, வாய்ப்பு ஏற்படும்.
கால அவகாசம்:
மேலும், விண்ணப்பதாரர்களுக்கு, போதிய கால அவகாசம் கொடுத்து, இணையதள பதிவில் உள்ள தவறுகளை சரி செய்யவும், டி.ஆர்.பி., வாய்ப்பு கொடுக்கும்.
இதுபோன்று, பல வசதிகள் இருப்பதால், அரசு பொறியியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது ஆய்வு நடந்து வருகிறது.
அரசு பொறியியல் கல்லூரிகளில், 139 உதவி பேராசிரியரை நியமனம் செய்ய, அக்டோபர், 26ம் தேதி, போட்டி தேர்வு நடக்கும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
இதற்கு, ஆகஸ்ட், 20ம் தேதி முதல் செப்டம்பர், 5ம் தேதி வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள்...: இதற்கு, 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. எனவே, இந்த தேர்வில் இருந்து, இணையதள பதிவு முறையை, டி.ஆர்.பி., அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்ப முறையா;
இணையதள பதிவு முறையா என்பது, இம்மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது..

17 comments:

  1. SCA tamil major wt 64 and above 64 comment here. We got top list(30 persons details) . Do u want to know reply here SCA only

    ReplyDelete
  2. நல்ல முன்னேற்றம் அதேபோல் பீஜீ தேர்வர்களின் இறுதிப்பட்டியலை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. இந்த பைனல் லிஸ்ட்(PGT) விட தீவிரமா அலோசனையை பண்ணினா உங்களுக்கு கோடி புண்ணியம்....

    ReplyDelete
  4. Examku apply பன்ற Methoda TNPSC கிட்ட இருந்து எடுத்துகிறதுக்கு பதிலா எல்லா Examsயும் TNPSC கிட்டயே ஒப்படைச்சிட்டா நல்லா இருக்கும்ல Think பண்ணுங்கப்பா..

    ReplyDelete
    Replies
    1. அனைத்து புதிய முறைகளை வரவேற்க்க Ready யாக உள்ளோம் ஆனால் தேர்வெழதி ஒரு வருடம் கடந்து விட்டது முதலில் தேர்வு முடிவுகளை வெளியிடுச்சொல்லுங்கள் பிறகு பார்போம் புதிய முறையை.

      Delete
  5. கௌதம் சார்..

    TNPSC Application Cost மிகவும் குறைவு. ஆனா லிஸ்டில Name, Marks Communal Turn வராது. Number மட்டும் தான் வரும்

    டி.ஆர்.பி ல Application Cost மிகவும் அதிகம். லிஸ்டில Name, Marks, Communal Turn எல்லாம் வரும்.

    பரவாயில்லைங்களா சார். ..

    ReplyDelete
    Replies
    1. அங்கே Number மட்டும் வந்தாலும் Court cases இல்லாம வந்துருதுல்ல..
      இங்க..

      Delete
    2. கௌதம் சார்...

      இவங்க(டி.ஆர்.பி) விண்ணப்ப கட்டணம் குறைப்பாங்களா?... சார்

      Delete
  6. Bharathy sir any good news tody

    ReplyDelete
    Replies
    1. பிரதாப் சார். ..
      இன்னைக்கு ரிசல்ட் வந்தால் தான் Good News...
      இல்லனா Bad News...

      Delete
  7. revaluation irruka?? illaya??
    intha week final list varuma?? varatha??
    apadiye vanthalum next month appointment poduvangala?? podamatangala??
    apadiye appointment potalum atha vangrathukku nan nalla nelamaila than irrupana??? illa na menatal ayiduvena??...OH MY GOD... enn nan ipadiyellam yosikiren.......

    ReplyDelete
    Replies
    1. What's happening mam dnot worry all are ending with good status so dnot fell because all is well

      Delete
  8. 1. TRB Decision பொருத்து...

    2. வாய்ப்பு(லிஸ்ட் வர) இருக்கும். ..

    3. 70% Appointment பண்ண வாய்ப்பு இருக்கும்..

    4. உங்க மனநிலையை பொருத்தது...

    ReplyDelete
  9. I thing after 30 th july paper1..list viduvanga..athuku..15days time kuduthu..August end kulla viraivil post podaranu..paper news varum...ippadiyae intha year ah ottiduvaanga...ithalaam eppo mudiumo..athuku piraku tha PG RESULT VARUM...so donot expect final result..

    ReplyDelete
  10. Why pg selection only delay? Is there any reason behind this? No one is give proper reason. Tet candidates are very much interested and they are very cooperative. We should do something then only we get justice.Trb give appointment only for Tami because they did mistake.they want to hide that.but now we lost our one year life.

    ReplyDelete
  11. இன்று சட்டப்பேரவை யில் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ பாலபாரதி அவர்கள் ஆசிரியர் நியமனம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். கடந்த ஒராண்டு காலமாக ஆசிரியர்கள் நியமிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    புதியதலைமுறை செய்தி

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.