WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 18, 2014

அரசு பள்ளிகளில் புதிதாக 3,459 ஆசிரியர்கள் நியமனம்: அமைச்சர் அறிவிப்பு - தி இந்து

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு புதிதாக 3,459 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்
என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார். 
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை விவாதம் நடந்தது. 

விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது: 

பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.62,583 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வரலாற்று சாதனை புரிந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. எனவே, தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ல் பள்ளிக்கல்வித் துறை தனது இலக்கை முன்கூட்டியே எட்டிவிடும். மாணவர்களின் நலத் திட்டங்களுக்காக மட்டும் ரூ.2,557 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அரசுப் பள்ளிகளில் 53,288 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் பட்டுள்ளன. 


கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நடப்பு கல்வி ஆண்டில் (2014-15) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் 74,177 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஆண்டு 100 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.20 லட்சம் செலவில் விளையாட்டு சாதனங்கள் வழங்கப்படும். கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் நலிவடைந்த வகுப்பு மாணவ, மாணவிகள் 32,563 பேருக்கு ரூ.1.63 கோடி செலவில் செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் ரூ.32 லட்சம் செலவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படும். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக, ரூ.5.35 கோடி செலவில் 202 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.


 இந்த இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும். நடப்பு கல்வி ஆண்டில் 2,489 பட்டதாரி ஆசிரியர்கள், 952 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 3,459 ஆசிரியர் பணியிடங்களும் 75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்களும், 340 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்படும். நூலகத்துக்கு வர இயலாத முதியவர்கள், உடல்நலமற்றவர்கள், இல்லத்தரசிகள் பயன்பெறும் வகையில் தருமபுரி, திருவள்ளூர், வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் ரூ.70 லட்சம் செலவில் நடமாடும் நூலகங்கள் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.

9 comments:

  1. Then wt about PG TRB.
    PLEASE PUT posting for all CV completed candidates in PG TRB. At least give posting in additional list like last year. Please please please our life is great ??????? Please give job for all CV completed candidates in PG TRB.

    ReplyDelete
  2. today can we expect any pg list in trb website?

    ReplyDelete
  3. Pg final selection list one week la relise seiranu TRB JD Mr arivoli last Monday sonnarae ...today is. The final working day of this week...trb...any possible to relise pg result tonight..anybody to know about it..please update your kind information

    ReplyDelete
  4. When v xpct the postin list? Today?

    ReplyDelete
  5. EXPECTATION:

    " For 2011, 2012, 2013 academic yrs- in govt schools 71,708 tchr posts r given permission to appoint. In that upto now 53,288 tcrs get appointed. So remaining (18,420) teachers get appointment soon in the hands of our CM" (EDN MINISTER VEERAMANI ANNOUNCEMENT IN ASSEMBLY: NEWS FROM TAMIL HINDU DATED 18.07.2014 page 6)

    [So total appointment to b held soon wil b 18420 as edn minister already announced as 18,000 posts to b filled.

    TRB GIVEN NOTIFICATION FOR
    10726 POSTS - PAPER 2

    SO IN REMAINING 7694 POSTS -
    2200 PG POSTS
    300 PG TAMIL MEDIUM OF TRB 2012
    1500 SG POSTS wil b filled.

    ADDITIONALLY remaining 3500 POSTS-(approximately) announcement for
    PAPER 2 & SPL TET as 2013-2014 vacancy WOULD BE QUICKLY EXPECTED SOON from our CM]

    ReplyDelete
  6. today, I called TRB regarding PG post some cases are pending in Madurai high court told a lady, enakku BP is increasing. is it true news -

    ReplyDelete
  7. TRB physics get 2 question corrected by judgement

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.