WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 16, 2014

கட்டமைப்பு வசதியின்றி 4 பி.எட்., கல்லூரிகள்: தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை 'நோட்டீஸ்'

உரிய கட்டமைப்பு வசதிகளின்றி செயல்படும், நான்கு கல்வியியல்
கல்லூரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.


தமிழகத்தில், ஏழு அரசு, 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவை தவிர, 665 தனியார் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில், 70 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்தாண்டு, புதியதாக சில கல்லூரிகள் துவக்குவதற்கான விண்ணப்பங்களை ஆசிரியர் பல்கலை பெற்றுள்ளது. இத்துடன், ஏற்கனவே உள்ள கல்லூரிகளின் கட்டமைப்பு வசதி குறித்து, பல்கலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, நான்கு கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகள் சரிவர இல்லை என்பது தெளிவாகியது. இக்கல்லூரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியதாவது: தமிழகத்தில், புதியதாக, இரண்டு கல்வியியல் கல்லூரிகள் துவக்க இந்தாண்டு, அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர் சேர்க்கைக்கு, 200 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். நான்கு கல்லூரிகளில், கட்டமைப்பு வசதி சரியாக இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அந்த கல்லூரிகள் விளக்கம் அளிப்பதுடன், அதிகாரிகள் சுட்டிக் காட்டிய குறைகளையும் நிவர்த்தி செய்துவிட்டால், நடவடிக்கை இருக்காது. இல்லாவிட்டால், கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.