பல்கலை, கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை, முறைகேடான
நடவடிக்கைகள் குறித்த, குறைகளை தீர்க்க, ஆன் - லைன், 'மாணவர்கள் குறைதீர் இணைய' வசதியை, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) ஏற்படுத்தி உள்ளது.
நடவடிக்கைகள் குறித்த, குறைகளை தீர்க்க, ஆன் - லைன், 'மாணவர்கள் குறைதீர் இணைய' வசதியை, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) ஏற்படுத்தி உள்ளது.
பல்கலை மற்றும் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், சேர்க்கையின் போதே பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். சில நேரங்களில், கல்லூரியில் சேர்ந்த பின், கல்லூரியின் அங்கீகாரம், அனுமதி உள்ளிட்டவற்றில் பிரச்னை ஏற்படுகிறது. இப்பிரச்னைகளை போக்க, யு.ஜி.சி., புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி, 'ஆன் - லைன் மாணவர்கள் குறை தீர்ப்பு இணையம்' அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாணவர்கள் இதில், தங்கள் குறைகளை பதிவு செய்தால், குறிப்பிட்ட கல்லூரி அல்லது பல்கலை அந்த குறைகளை நிவர்த்தி செய்யும். குறிப்பிட்ட பல்கலை அல்லது கல்லூரி மற்றும் யு.ஜி.சி., ஆகியவை, மாணவர்களின் உண்மையான தேவை குறித்தும், அறிந்து கொள்ளலாம். மேலும், குறைந்த காலத்தில் குறைகள் நிவர்த்தி செய்யப்படுவதுடன், கல்வி நிறுவனங்கள் புதிய கொள்கை முடிவுகளை எடுக்கவும் வசதியாக இருக்கும் என, யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது. பல்கலைகளில், இதற்கான தனி அதிகாரியை நியமிக்க, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது. மேலும் இந்த அதிகாரி, பல்கலையின் கீழ் வரும் கல்லூரிகளில் இருந்து வரும் புகார்களையும் கவனிப்பார் என்றும் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.