WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 24, 2014

சட்டக் கல்லூரிகளில் 50 விரிவுரையாளர்கள் நியமனம் செப்டம்பர் 21-ல் எழுத்துத்தேர்வு

அரசு சட்டக் கல்லூரிகளில் 50 முதுநிலை விரிவுரையாளர்கள் போட்டித்தேர்வு
மூலமாக நேரடியாக நியமிக்கப்படுகிறார் கள். இதில், சட்டம் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் 30 காலியிடங் களும், ஆங்கிலம், பொருளா தாரம், வரலாறு, அரசியல் அறிவி யல், சமூகவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் 20 காலியிடங் களும் இடம்பெற்றுள்ளன.
சம்பந்தப்பட்ட பாடத் தில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்ணுடன் (எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் 50 சதவீதம்) நெட் அல்லது ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை ஆகஸ்ட் 11-ந் தேதி முதல் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் ரூ.100 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் சமர்ப் பிக்க வேண்டும்.

முதுநிலை விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 21-ந் தேதி அன்று நடை பெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செய லாளர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். காலியிடங்கள், கல்வித்தகுதி, தேர்வுக்கான பாடத் திட்டம் உள்ளிட்ட விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.