WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 24, 2014

ரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள் 16 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

'ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில், மூன்று ஆண்டுகளாக அல்லாடி வரும், 16
ஆயிரம் பகுதி நேர ஆசிரியரை, பணி நிரந்தரம் செய்து, முறையான சம்பளம் வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும்' என, பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கத்தின் மாநில அமைப்பாளர், சேசுராஜா, நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2011ல், 16,549 பகுதி நேர ஆசிரியரை நியமனம் செய்ய, முதல்வர் உத்தரவிட்டார்.
ஓவியம், தையல், உடற்கல்வி என, பல பிரிவுகளின் கீழ், வாரத்திற்கு, மூன்று நாள் வேலை, மாதம், 5,000 ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில், மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். இந்த காலத்தில், 5,000 ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? வருத்தமாக உள்ளது

இது, தமிழக அரசுக்கு தெரியாத விஷயம் கிடையாது. ஆனாலும், எங்களின் பிரச்னையை, இதுவரை, கண்டு கொள்ளாமல் இருப்பது, வருத்தமாக உள்ளது. இந்த குறைந்த சம்பளத்திற்கு, ஏராளமான ஆசிரியர், 100 கி.மீ., முதல் 150 கி.மீ., துாரம் வரை பயணிக்கின்றனர். வாங்கும் சம்பளத்தில், பாதி தொகை, பஸ் செலவிற்கே போய்விடுகிறது. மீதியுள்ள சம்பளத்தை வைத்து, குடும்பத்தை ஓட்ட முடியாமல், அல்லாடி வருகிறோம். தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, சிறப்பு தேர்வு நடத்தி, பணிவரன் முறை செய்து, தமிழக அரசு, ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோல், எங்களுக்கும், சிறப்பு தேர்வை நடத்தி, முறையான சம்பளத்தில், பணி நியமனம் செய்ய வேண்டும். மற்ற ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் பெற, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நாங்கள், பணியிட மாறுதலுக்கு வாய்ப்பே இல்லாமல், மூன்று ஆண்டுகளாக, ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறோம். பலரும், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எங்களது பிரச்னையை தீர்க்க, முதல்வர், முன் வர வேண்டும். இவ்வாறு, சேசுராஜா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.