அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்காக
ஆகஸ்ட் 8 முதல் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. முதலில் கணிதப் பாடத்தில் விண்ணப்பித்தவர்களில் இருந்து நேர்முகத் தேர்வு தொடங்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 8 முதல் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. முதலில் கணிதப் பாடத்தில் விண்ணப்பித்தவர்களில் இருந்து நேர்முகத் தேர்வு தொடங்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இரண்டு கட்டங்களாக நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு 1:5 என்ற விகிதத்தில் தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்காக 14,845 பேர் விண்ணப்பித்தனர்.
இதில் பணி அனுபவத்துக்கு 15 மதிப்பெண்ணும், கல்வித் தகுதிக்கு 9 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும் என 34 மதிப்பெண் வழங்கப்படும். இந்த மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பணி அனுபவம் மற்றும் கல்வித் தகுதியில் 24 மதிப்பெண்ணுக்கு, தேர்வர்கள் எடுத்த மதிப்பெண் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு 1:5 என்ற அடிப்படையில் (ஒரு பணியிடத்துக்கு 5 பேர்) இப்போது விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நேர்முகத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக, கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், எலெக்ட்ரானிக் சயின்ஸ் அண்ட் எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன், விலங்கியல், மீன்வளம், புவியியல், சுற்றுலா, சுற்றுலா போக்குவரத்து மேலாண்மை, உளவியல், சம்ஸ்கிருதம், சமூகவியல், உடற்கல்வியியல் ஆகியப் பாடங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.
இரண்டாவது கட்டமாக, தமிழ், ஆங்கிலம், புள்ளியியல், வரலாறு, வேதியியல், தாவரவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பொருளாதாரம், அரசியல் அறிவியல், விஷுவல் கம்யூனிகேஷன், இந்திய கலாசாரம், மனித உரிமைகள், பொது நிர்வாகம், வர்த்தக நிர்வாகம், வர்த்தக மேலாண்மை, வணிகப் பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் முதல் கட்டமாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு, அவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களும் தனியே அனுப்பப்படும். அழைப்புக் கடிதங்களுக்காக காத்திராமல் தேர்வர்கள் இணையதளத்திலிருந்து தங்களுக்கான அழைப்புக் கடிதங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. சில பாடங்களில் வகுப்பு வாரியாக ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
Thank you for posting this detailed news..
ReplyDelete