WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 16, 2014

கிராம கல்விக் குழு கணக்காளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.!

தருமபுரி :
தாற்காலிக அடிப்படையில் கிராம கல்விக் குழு கணக்காளர்கள்
பணியிடத்துக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
வட்டார வளமைய கட்டுப்பாட்டில் உள்ள இந்த பணியிடங்களில் 11 பேர் மாவட்ட அளவில் நியமிக்கப்பட உள்ளனர்.
இவர்களுக்கு வட்டார வளமையம் மூலம் மாதந்தோறும் ரூ.9,900 தொகுப்பூதியமாக அளிக்கப்படும். விண்ணப்பிப்போர் ஆகஸ்ட் முதல் தேதியன்று 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பி.காம் கல்விச் சான்று, டாலி கணினி தகுதிச் சான்றுடன் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வருகிற செப்.1ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். தகுதியானவர்களுக்கு மட்டும் எழுத்துத் தேர்வு அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வருகிற செப்.13ஆம் தேதி நடைபெறும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.