தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ‘கட்-ஆப்‘ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில்
குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் பட்டதாரி ஆசிரியர் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் பவுசிநேசல் பேகம்(வயது 38). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
நான், பி.லிட்(தமிழ்)., பி.எட்., படித்துள்ளேன். மேலும், தமிழ் பண்டிட் பயிற்சியும் முடித்துள்ளேன். நான், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவள். கடந்த 18.8.2013 அன்று நடந்த பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில் 150-க்கு 94 மதிப்பெண் பெற்றேன். இதைதொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டேன். பின்பு, தகுதித்தேர்வில் எடுத்த மதிப்பெண், ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் ஆகியவற்றை கணக்கிட்டு தகுதியானவர்களின் தற்காலிக பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
மறுத்து விட்டது
நான், 100-க்கு 60.86 மதிப்பெண்கள் பெற்றதாகவும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களை பொறுத்தமட்டில் 61.44 கட்-ஆப் மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-2, பி.லிட்., பி.எட்., ஆகியவற்றில் நான் பெற்ற மதிப்பெண்கள், வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி எனக்கு, 60.86 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. பி.லிட்., பி.எட்., படித்தவர்களும், பி.லிட்.,படித்து தமிழ் பண்டிட் முடித்தவர்களும் தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். பி.லிட்., பி.எட்., படித்தவர்களுக்கு பி.எட்., படிப்பில் பெற்ற மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பி.லிட்., படித்து தமிழ் பண்டிட் முடித்தவர்களுக்கு தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
கட்-ஆப் மதிப்பெண்
நான், பி.எட்., முடித்துள்ளேன். அதே போன்று தமிழ் பண்டிட்டும் முடித்துள்ளேன். தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொண்டால் ஆசிரியர் தேர்வு வாரியம் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கு நிர்ணயித்துள்ள கட்-ஆப் மதிப்பெண்ணை விட அதிகமாக 62.13 மதிப்பெண்கள் பெற்று விடுவேன். பி.எட்., படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொண்டதால் எனக்கு கட்-ஆப் மதிப்பெண் கிடைக்கவில்லை. எனவே நான், தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொண்டு பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
நோட்டீசு
இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சேவியர்ரஜினி ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும், பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனங்கள் அனைத்தும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
.
ReplyDeleteதேர்வான அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களது
வாழ்த்துக்கள்
இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல
எங்கள் பக்கம் உள்ள நியாத்தை கேட்கிறோம்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒ௫ அநீதியான ஒ௫ ஆசிரியர் தேர்வு முறை இந்த Weightage system.
இதே Weightage முறை இந்தியா முழுக்க அமல்படுத்தியி௫ந்தல்
இந்தியா முழுக்க உள்ள மூத்த ஆசிரியர்கள் இந்த Weightage முறையால் கதறி இ௫ப்பார்கள்.
6 மாதம்
முனபே (August-2013 ல்)
முடிந்த Tet தேர்வுக்கு 5%
தேர்ச்சி மதிப்பெண் சலுகை 82/150
எடுத்தலே Pass என்று February 2014 ல் வழங்கி
90/150
மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
வயிற்றில் அடித்துவீட்டிர்கள். இதனால் எங்கள் அரசு பணிவாய்ப்பு பறிபோனது.
Weightage முறையால் எங்கள் எதிர்கால வாழ்க்கையையும் பறித்துவீட்டிர்கள்
இவர்கள் கூற்றுபடி 2012ல்
TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
எடுத்தவர்தான் தரமான ஆசிரியர்.
ஆனால் 2014 TET ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர். காரணம் என்ன?
இன்னும் 2016 ல் சட்டமன்ற தேர்தலின் போது தரமான ஆசிரிய௫க்கு எவ்வளவு
பதிப்பெண நிர்ணாயிப்பார்கள் என்று தெரியவில்லை.
இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும்.
நாங்கள்
தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா இல்லை
B.Ed / D.Ted படித்தது குற்றாமா இல்லை
TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா ?
மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமார்ந்த ஆசிரியர்களே
என்ன செய்ய போகீறீர்கள் ?
Paper 1 ல்
Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் Dted ஆசிரியர்களே என்ன போகீறீர்கள் ?
அடுத்த டெட்க்கு படிக்க போகீறீர்களா?
நான்றாக சிந்தித்து பா௫ங்கள்
இந்த Weightage முறை தொடர்ந்தல் அடுத்த டெட்டிலும்
நமக்கு இதே நீலமைதான் ?
அடுத்த டெட்டில் பெ௫ம்பாலும் இப்போதுள்ள புதிய கல்வி முறையில் (with internal mark) படித்து MAY 2014 ல் B.Ed முடித்துவிட்டு வ௫பவர்களைதான் தேர்ச்சி பெறுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
தவறான Weightage முறையால்
அரசு பணி யிழந்து தன்மானம்
இழந்து நாம் தமிழ்நாட்டில் வாழ்வதைவிட பேசாமல் நம்மை தமிழ்நாட்டில் வாழ நீங்கள் தகுதியற்றவர் என்று கூறி நம்மளை நாடு கடத்திவிட்டாலவது நாம் நிம்மாதியாக வாழலம்.
5%
தேர்ச்சி மதிப்பெண் சலுகை
வழங்க போரடிய Prince
கஜேந்தர பாபுவே இந்த Weightage முறை முற்றி்லும் தவறு என்று தந்தி தொலைக்காட்சியில் இன்று (25.8.14)
கூறியுள்ளார். கல்வியாளர்களின் க௫த்தும் இதுவே.
நீதிமன்றமும் Scientific method யை பின்பற்ற வேண்டும் என்று கூறியதோ தவிர
+12 , Degree மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.
நண்பர்களே
இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
அரசின் தவறான முடிவுகளால்
90
மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பறிபோயி௫க்கிறது.
அதை மீட்டெடுக்கும் நேரமீது.
காவல்துறை &அரசு அனுமதியுடன்
அறவழியில் போரடுவோம்.
ஓவ்வொ௫ மாவட்டத்திலும் இதை செய்வோம்.
ஒன்று கூடுங்கள்
ஒன்று கூட்டுங்கள்.
தேர்வானவர்களின்
Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB - நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.
2013-14
கல்வியாண்டின் காலிபணியிடங்களை ஏன் நம்மை கொண்டு பணியமர்த்துகூடாது
அப்படி செய்யமாட்டார்கள் காரணம் ????
எங்கள் க௫த்து நியாமாக இ௫ப்பின் எங்கள் அறப்போரட்டம் சம்மந்தமான செய்திகளை
நேரிடையாக பிறர் இடமோ
Message
Facebook
Twitter
YouTube
What's app போன்ற சமூக தளங்களில்
பகி௫ங்கள்
.
ஒன்று கூடுங்கள்
ஒன்று கூட்டுங்கள்
.
செய்வீர்களா
நீங்கள் செய்வீர்களா
என தேர்தலின் போது கேட்ட
நீங்கள்
இப்போது எங்களுக்கு இழக்கபட்ட ஆநிதியில்
நியாமாக ஏதேனும்
செய்வீர்களா ? நீங்கள்
செய்வீர்களா ? அம்மா.
.