WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 7, 2014

இன்னும் ஒருவாரத்தில் எம்.எட். மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சலிங் பற்றிய அறிவிப்பு

பி.எட் படிப்புக்கான பொது கவுன் சலிங் புதன்கிழமை தொடங்கியது. இதில்
இந்த ஆண்டு முதல்முறை யாக ஆன்லைன் முறையில் கவுன்சலிங் நடக்கிறது. 

தமிழகத்தில் உள்ள 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பில் 2,155 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை இந்த ஆண்டு ஆன்லைன் கவுன்சலிங் மூலமாக நிரப்ப அரசு முடிவுசெய்தது. இதைத்தொடர்ந்து, கவுன்சலிங் நடத்தும் பொறுப்பு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

பி.எட். படிப்பில் சேர விண்ணப் பித்திருந்த 10,500 பேரில் 10,450 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தர வரிசைப்பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இந்த நிலை யில், மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கவுன்சலிங் சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய 4 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது. 

கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 

சென்னையில் ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கவுன்சலிங்கை தொடங்கி வைத்தார். மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத் தினரின் வாரிசுகள் ஆகியோருக் கான கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை அவர் வழங்கினார். 
கவுன்சலிங் தொடக்க நிகழ்ச்சி யில், உயர்கல்வித்துறை முதன் மைச் செயலாளர் ஹேமந்த்குமார் சின்ஹா, கல்லூரி கல்வி இயக்குநர் எம்.தேவதாஸ், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன், பதிவாளர் எஸ்.கலைச்செல்வன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

கவுன்சலிங் தொடர்பாக ஆசிரி யர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன், நிருபர்களிடம் கூறியதாவது:- 

தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை 

பி.எட். படிப்புக்கு இந்த ஆண்டு தான் முதல்முறையாக பொது கவுன்சலிங் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த கவுன் சலிங் 9-ந் தேதி வரை நடக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள பி.எட் இடங்கள் மட்டுமே கவுன்சலிங் மூலம் நிரப்பப்படுகிறது. தனியார் கல்லூரிகளைப் பொருத்தவரையில், கல்லூரி நிர்வாகங்களே இடங்களை நிரப்பிக்கொள்ளும். தனியார் கல்லூரிகளில் பி.எட் படிப்புக்கு ரூ.41,500-ம் நாக் தர அங்கீகாரம் பெற்றிருந்தால் ரூ.46,500 மட்டும் வசூலிக்க வேண்டும். 
அரசு நிர்ணயித்த கல்விக்கட் டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வியியல் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
அதிக கட்டணம் வசூலித்தால் அதுபற்றி நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி யிடமோ அல்லது ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழகத்திலோ மாணவர்கள் புகார் செய்யலாம். பி.எட். வகுப்புகள் ஆகஸ்ட் 20-ந் தேதி தொடங்கும். 
இவ்வாறு துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார். 

எம்.எட். அட்மிஷன் எப்போது? 

எம்.எட் படிப்பு பற்றி துணைவேந்தர் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறும்போது “பி.எட். படிப்பை போன்று எம்.எட். படிப்பும் இந்த ஆண்டு பொது கவுன்சலிங் மூலமாக ஆன்லைனில் நிரப்பப் பட உள்ளது. இதற்கான அரசு உத்தரவு ஓரிருநாளில் வந்துவிடும். அதைத்தொடர்ந்து, இன்னும் ஒருவாரத்தில் எம்.எட். மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சலிங் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். பி.எட். மதிப்பெண், இடஒதுக்கீட்டு விதிமுறை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். பொது கவுன்சலிங் மூலமாக சுமார் 700 இடங்கள் நிரப்பப்படும்” 

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.