WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, September 21, 2014

டிஎன்பிஎஸ்சி: சிவில் நீதிபதி எழுத்துத் தேர்வு நவம்பர் 1-க்கு ஒத்திவைப்பு!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் சிவில் நீதிபதி பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி மொழிபெயர்ப்புத் தாள், தாள் ஒன்று ஆகியவை நவம்பர் 1-ஆம் தேதியும், தாள்-2, தாள்-3 ஆகியவை நவம்பர் 2-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசித் தேதி அக்டோபர் 3-ஆம் தேதி என மாற்றப்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்த கடைசி நாள் அக்டோபர் 6-ஆம் தேதி என்றும் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வுகள் அக்டோபர் 18, 19 தேதிகளில் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் இப்போது மாற்றம் செய்யப்பட்டு புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.