கல்வித்துறையில் காலியாக உள்ள தட்டச்சு
பணியிடங்களுக்கு நெல்லையில் தேர் வான 15 பேருக்கு பணி நிய மன உத்தரவை முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரிபாய் வழங்கினார்.
பணியிடங்களுக்கு நெல்லையில் தேர் வான 15 பேருக்கு பணி நிய மன உத்தரவை முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரிபாய் வழங்கினார்.
டிஎன்பிஎஸ்சி குரூப்4ல் கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள தட்டச்சர் பணிக்கு ஒதுக் கீடு செய்யப் பட்டவர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது.நெல்லை மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 15 பேர் இக்கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.
முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரிபாய் முன்னிலையில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இதில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், நெல்லை கல்வி மாவட்ட அலுவலகம், நாங்குநேரி, களக்காடு, வள்ளியூர், தென்காசி, கடையம் ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க கல்வி அலுவலகங்கள் உள்ளிட்ட 11 இடங்களில் காலியாக உள்ள தட்டச்சர் பணிக்கு அழைக்கப்பட்டிருந்தவர்களில் மாநில சீனியாரிட்டி அடிப்படையில் 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற 4 பேர் வெளிமாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான நியமனத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.