WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, September 13, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

'ஐ.ஏ.எஸ்., உட்பட, அனைத்து அரசுப் பணிகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு,
3 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், நேற்று உத்தரவிட்டது.

மும்பை ஐகோர்ட் : 

'அனைத்து அரசுப் பணிகளிலும், பதவி உயர்வுகளிலும், மாற்றுத்திறனாளி களுக்கு, 3 சதவீத ஒதுக்கீடு அளிக்க வேண்டும்' என, மும்பை ஐகோர்ட் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது. மத்திய அரசு சார்பில் இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி, ஆர்.எம்.லோதா தலைமையிலான, 'பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், பிங்கி ஆனந்த் கூறுகையில், ''குரூப் - ஏ மற்றும் குரூப் - பி பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான பதவி உயர்வுகளில், ஒதுக்கீடு அளிக்க முடியாது,'' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

 மாற்றுத்திறனாளிகளுக்கு சமஉரிமை அளிக்கவும், போதிய வாய்ப்பளிக்கவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும், 1995ல், சட்டம் இயற்றப்பட்டது.

ஆனால், இந்த சட்டம், 19 ஆண்டுகளாக உரிய முறையில் அமல்படுத்தப்படவில்லை. இதனால், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த சட்டத்தால் பயன் கிடைக்கவில்லை. பணி நியமனம் குறித்த விவகாரத்தில், மத்திய அரசு பரந்த மனப்பான்மைஉடன் செயல்பட வேண்டுமே தவிர, குறுகிய மனப்பான்மையுடன் செயல்படக் கூடாது. ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், அதற்கு முட்டுக்கட்டை போடுவது சரியல்ல.

பதவி உயர்விலும்...: 

எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு, ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட அனைத்து அரசுப் பணி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளில், 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.