தமிழக மருத்துவ துறையில் இருட்டறை உதவியாளர் பணியிடங்களுக்கு
பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அபுபக்கர் சித்திக் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் கோரப்பட்டுள்ள இருட்டறை உதவியாளர் பணியிடங்களுக்கு நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் தகுதி வாய்ந்த பதிவுதாரர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இருட்டறை உதவியாளர் பணியிடத்திற்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் வழங்கப்பட்ட இருட்டறை உதவியாளர் சான்று பெற்றிருக்க வேண்டும். 1.7.2013 அன்று ஆதிதிராவிடர், அருந்ததியர் 18 முதல் 35 வயது வரையும், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) 18 வயது முதல் 32 வயது வரையும், இதர வகுப்பினர் 18 முதல் 30 வயது வரையும் இருக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது தளர்வு உண்டு.
இதற்கான பதிவுமூப்பு விவரம் வருமாறு:
முன்னுரிமை பிரிவினர், முன்னுரிமை இல்லாதவர்கள் 8.8.2014 வரை. இந்த கல்வித்தகுதி, வயது வரம்பு, உரிய பதிவு மூப்பிற்கு உட்பட்ட பதிவுதாரர்கள் தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட்ட விவரத்தை செப்.15ம் தேதிக்குள் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி உறுதி செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.