WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 12, 2014

மாணவர்கள் விபரம் சேகரிப்பு; தலைமை ஆசிரியர்கள் திணறல்

மாணவர்களின் எடை, உயரம், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண்
விபரங்களை, ஆன் லைனில் "அப்டேட்' செய்ய விவரம் சேகரிப்பதில், தலைமை ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.

மாணவர்களின் இடை நிற்றலை தவிர்க்கவும், அவர்களது சுய விபரங்களை அறிந்து கொள்ளவும், பள்ளி கல்வித்துறை சார்பில் "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கான நடைமுறைகள் கடந்த 2013 ஏப்ரலில் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்களின் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவை சி.டி.யாக சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர்,மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு ,ஒரு நகல், அந்தந்த பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் தொடங்கிய பணி, 2013 டிசம்பரில் நிறைவு பெற்றது.

இந்நிலையில்,கல்வி தகவல் மேலாண்மை திட்ட இணையதளத்தில்,அப்டேட் செய்யும் வகையில், அடுத்த கட்டமாக,மாணவ,மாணவிகளின் எடை, உயரம் மற்றும் பெற்றோர் தொலைபேசி எண், பெற்றோர் அல்லது மாணவரின் மின்னஞ்சல் முகவரி ஆகிய விபரங்களை வரும் 25-ம் தேதிக்குள் சேகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் எடையை பரிசோதிக்க பள்ளிகளில் எடை மிஷின் இல்லை. ஒரு சில மாணவர்கள் அந்த பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கோ, வேறு ஊருக்கோ மாறுதலாகி சென்று விட்டனர். அவர்களது விபரங்களை சேகரிக்க முடியவில்லை. விபரங்களை சேகரிக்கும் கல்வித்துறை, அதற்குரிய வசதிகளை செய்து தருவதில்லை,என தலைமை ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.