தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், காலியாக
உள்ள 1,906 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான பொறுப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்தது.
இந்தப் பணிக்கு மொத்தம் 14 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்பின்னர், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. தொடர்ந்து, மதிப்பெண்ணில் சந்தேகம் மற்றும் திருத்தம் இருப்பதால், அதற்காக முகாம் நடத்தப்பட்டது. அதன்பிறகு, நேர்முகத் தேர்வு நடந்தது. தற்போது நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளமான www.trb.tn.nic.in -ன் வெளியிடப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.